வெஜிடபுள் கலவை கறி - VEGETABLE KALAVAI KARI
தேவையான பொருட்கள்:
- காரட், பீன்ஸ், காலிஃப்ளவர், உருளை, குடைமிளகாய் - 250 கிராம்
- பச்சை மிளகாய் - 3
- வெங்காயம் - பாதி
- பூண்டு - 5
- இஞ்சி - அரை இன்ச்
- தேங்காய் - கால் பாகம்
- உப்பு - தேவையான அளவு
- நெய் - சிறிது
- புளி - சிறிது
- கடுகு, சீரகம் - தலா ஒரு தேக்கரண்டி
- சோம்பு - அரை தேக்கரண்டி
- மிளகு, சீரகம், வெந்தயம் - தலா அரை தேக்கரண்டி
செய்முறை:
காய்கறிகளை நன்கு சுத்தம் செய்து கழுவி சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். தேங்காயை துருவி பால் பிழிந்து வைக்கவும். வெங்காயம், இஞ்சி, பூண்டு, குடைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியை கரைத்து வைக்கவும்.
வாணலியில் கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் சேர்த்து வறுத்து பொடிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி கடுகு, சீரகம், சோம்பு தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் வேக வைத்த காய்கள் சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றுடன் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல் மற்றும் தேங்காய்ப் பால், உப்பு ஆகியவற்றை ஊற்றி கொதிக்க வைக்கவும். இறக்குவதற்கு முன் பொடித்த பொடி தூவி இறக்கவும்.
சுவையான வெஜிடபுள் கலவை கறி தயார்.


0 comments:
Post a Comment