காஷ்மீரி பனீர் - KASHMIRI PANEER
தேவையான பொருட்கள்:
- பனீர் - கால் கிலோ
- வெங்காயம் - ஒன்று
- தக்காளி - 2
- கெட்டி தயிர் - கால் கப்
- சீரகம் - ஒரு தேக்கரண்டி
- பெருங்காயப் பொடி - ஒரு சிட்டிகை
- மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
- மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- கரம் மசாலா - அரை தேக்கரண்டி
- சோம்புத் தூள் - கால் தேக்கரண்டி
- சுக்குத் தூள் - கால் தேக்கரண்டி
- குங்குமப் பூ - ஒரு சிட்டிகை
- வெந்நீர் - அரை கப்
- எண்ணெய் - தேவைக்கு
- உப்பு - தேவைக்கு
செய்முறை:
ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பனீர் துண்டுகளைப் போட்டு பொரித்தெடுத்து அரை கப் வெந்நீரில் மூழ்கியிருக்குமாறு போட்டு வைக்கவும்.
தக்காளியின் தோலை நீக்கி விட்டு அரைத்து வைக்கவும்.
தயிருடன் குங்குமப் பூ சேர்த்து கலந்து வைக்கவும்.
கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பெருங்காயப் பொடி சேர்த்து தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் சீரகம் மற்றும் மசாலா பொடி வகைகள் அனைத்தையும் சேர்க்கவும்.
பின்னர் அரைத்த தக்காளி விழுதினை சேர்த்து வேகும் வரை வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் தயிர் சேர்த்து கலந்து விடவும். அத்துடன் பனீர் மற்றும் ஊறிக் கொண்டிருக்கும் வெந்நீரையும் சேர்த்து சிம்மில் 5 நிமிடங்கள் வைக்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கும் முன் கால் தேக்கரண்டி சுக்குத் தூள் சேர்த்து கலந்து விடவும்.
சுவையான காஷ்மீரி பனீர் தயார். சப்பாத்தியுடன் பரிமாறவும்.


0 comments:
Post a Comment