பசலிக்கீரை மட்டன் தொக்கு- PALAK KEERAI MOTTON CURRY
தேவையான பொருட்கள் :
ஆட்டுக்கறி (கொழுப்புடன்) - 500 கிராம்
பசலிக்கீரை - 250 கிராம் (ஒரு சிறிய கட்டு)
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
இவங்கப்பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
சோம்புப் பொடி - I தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் : அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் & உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
பசலிக்கீரை - 250 கிராம் (ஒரு சிறிய கட்டு)
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
இவங்கப்பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
சோம்புப் பொடி - I தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் : அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் & உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை :
ஒரு குக்கரில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு, சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் , பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும், நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்புப் பொடி, உப்பு சேர்த்து கிளறவும். கழுவிய ஆட்டுக்கறி துண்டுகளை அதில் சேர்க்கவும்.
சிறிதளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி மிதமான சூட்டில் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
குக்கரை ஆவி நின்றவுடன் திறந்து, கீரையை சேர்க்கவும், மீண்டும் மிதமான சூட்டில் வைத்து 3 நிமிடங்கள் வேக விடுவம்.
தொக்கு பதத்திற்கு வந்தவுடன் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு , கொத்த மல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான பசலிக்கீரை மட்டன் தொக்கு தயார்.


0 comments:
Post a Comment