நம் உணவுமுறையில் - பசித்த பின் புசி என்பதே தாரக மந்திரம். பசிக்கவில்லை என்றால் அய்யோ 4 முட்டை காலையில் சாப்பிடலைன்னா கை கால் விளங்காது என்ற அளவில் கிலி ஆகவேண்டாம். ரிலாக்ஸ்டாக விட்டுவிட்டு, நன்கு பசிக்கும்போது சாப்பிடவும்.
-------------------
முட்டை கூட உண்ணாத சைவ உணவுக்காரர்கள் தினமும் ஒமேகா 3 - 1000 எம்.ஜி சப்ளிமெண்ட் எடுக்கனும். ஆளி விதை என்று கிடைக்கும் ஃப்ளாக்ஸ் ஸீட்ஸ் தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டவேண்டும். வேறு வகையாகவும் இந்த ஃப்ளாக்ஸ் ஸீடை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் (உப்புமா கூட செய்யலாம் என நம் ரெஸிப்பி பேஸ்புக் குழுவில் பார்த்தேன்)
-------------------
சர்க்கரை வியாதிக்காரர்கள் - சுகர் டெஸ்ட் செய்யும் மெஷின் கண்டிப்பாக வாங்கி பயன்படுத்தும் முறை அறிந்துகொள்ளவேண்டும். எக்ஸ்பையர் ஆன டெஸ்டிங் ஸ்டிரிப்ஸ் உபயோகப்படுத்த கூடாது. விரலை நசுக்கோ நசுக்கு என நசுக்கி ரத்தம் எடுக்க கூடாது. (இரண்டிலும் ரீடிங் அதிகம் காட்டும்).
-------------------
தினமும் காலையில் இரண்டு பூனைப்பல் சைஸ் பூண்டை வெட்டி பத்து நிமிடம் கழித்து சாப்பிடவேண்டும் என முந்தைய டிப்ஸ் பதிவில் பார்த்தோம் அல்லவா ? அல்சர் இருந்தால் இதை தவிர்க்கவேண்டும். அப்கோர்ஸ் அல்சர் குணமானதும் பூண்டு சாப்பிடலாம்.
-------------------
உணவு முறை மாற்றம் என்பது போனில் இருக்கும் பேசும் வசதி. யோகா, மெடிட்டேஷன் எல்லாம் அதில் இருக்கும் எஸ்.எம்.எஸ் வசதி / ஆப்ஸ் மாதிரி. வேல்யூ ஆடட் சர்வீஸஸ். முயற்சியும் உழைப்பும் ஆர்வமும் இருப்பவர்கள் கண்டிப்பாக கற்று தெளிந்து பயிற்சி செய்யலாம்.
-------------------
கெபிர் என்பது ஒரு வகையான புரோபயாட்டிக் தயிர். இதை உண்டால் பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்கும். இதை தயாரிக்க தயிருக்கு பாலில் உறை ஊற்றுவது போல கெபிர் கல்ச்சர் போட்டு வைக்கவேண்டும். நம் குழு உறுப்பினர்கள் - பேலியோ குடும்பத்தினர் - ஒருவருக்கு ஒருவர் இலவசமாகவே அன்புடன் ஒவ்வொரு ஊரிலும் பகிர்ந்துகொள்கிறார்கள். குழுவில் கேட்டு யாரிடம் உள்ளது - எப்படி செய்வது என அறிந்து கற்றுக்கொள்ளவும். உங்கள் வீட்டு கெபிரை அக்கம் பக்கத்தவரிடம் பகிர்ந்துகொள்ள மறக்கவேண்டாம்.
-------------------
ஆட்டு கொழுப்பு அதிகம் கிடைக்கும்போது (அல்லது சொல்லி வைத்து) வாங்கி வந்து, அப்படியே வாணலில் போட்டால் எண்ணை போல் உருகும். அதை பாட்டிலில் போட்டு ஃப்ரிஜ்ஜில் வைத்துக்கொள்ளவும். முட்டை ஆம்லேட் போடும்போதோ, காய்கறி பொறியல் செய்யும்போதோ இதை எண்ணையாக பயன்படுத்தலாம். (வெஜிட்டேரியனில் இருந்து நான் வெஜ் ஆக மாற முயல்பவர்கள் இதில் இருந்து ஆரம்பிக்கலாம். இந்த நல்ல டிப்ஸ் அளித்தவர் - சுந்தரம். (பேர் தேடி எடுக்கவேண்டும், இப்போதைக்கு சுந்தரம் என எழுதிக்கொள்கிறேன்).
-------------------
தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவுகள் : மக்காச்சோளம், ஃப்ளாக் ஸீட், சர்க்கரை வள்ளி கிழங்கு, ப்ராக்களி, முட்டைக்கோஸ், முள்ளங்கி. (சோளம், சர்க்கரை வள்ளி கிழங்கெல்லாம் ஏற்கனவே பேலியோ - தவிர்க்கவேண்டிய காய்கறிகள் பட்டியலில் உள்ளது. முட்டை கூட சாப்பிடாத சைவர், தைராய்டு இருந்தால் கண்டிப்பாக ஒமேகா 3 மாத்திரை வடியில் எடுக்கவேண்டும்.
-------------------
பாதாம் சாப்பிட சொல்றீங்க ஆனா முந்திரி ஏன் சாப்பிட கூடாதுன்னு சொல்றீங்க என்ற கேள்வியை கேட்டவர் ராம் குமார். (இவர் ராம்குமாரே தான்). முந்திரியில் கார்ப் அதிகம். பாதாம் அளவுக்கு சத்துக்கள் இல்லை. சொன்னா கேளுங்க ராம்குமார்.. அதாவது ஆல்மண்ட்ஸ் - அவகாடோ - முட்டை - இறைச்சி என்ற மேஜிக் காம்பினேஷனை கண்டறிந்தவர் நம்ம குழுவின் தலைவர் நியாண்டர் செல்வன். பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னமாதிரி ராம்குமார்.
-------------------
ப்ளாக் டீ - க்ரீன் டீ வாயில வைக்க சகிக்கல என்பவர்கள் பால் டீயையே சர்க்கரை இல்லாமல் குடிங்க. டயட் ஆரம்பித்து முதல் 100 நாள் ரொம்ப கறார் ஆக இருந்துவிடுங்கள். அது அப்படியே பழகிவிடும்

0 comments:
Post a Comment