பெர்சீ அமெரிக்கானா என்ற அறிவியல் பெயரிட்டு அழைக்கப்படும் அவகாடோ, ஒரு மரத்தில் காய்க்கும் பழ வகை. நம்மூரில் பட்டர் ப்ரூட், வெண்ணைப்பழம் என பெயரிட்டு அழைக்கிறோம். ஊட்டி கொடைக்கானல் ஏற்காடுல விளையுது என்று சொல்கிறார்கள். கிலோ 80 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை விற்கிறார்கள். (எங்க ஊர் ஸ்வீடனில் ரொம்ப விலை அதிகம் - ஒரு பழம் 100 ரூபாய்க்கு வாங்குறேன்).
உலகமெங்கும் விளைவிக்கப்படும் அவக்காடோ, முட்டை வடிவத்தில், உள்ளே பெரிய கொட்டையுடன் இருக்கும். ஆரம்பத்தில். பழுக்காத பழம் பச்சையாகவும், பழுத்த பழம் மேல் தோல் கருப்பாகவும் மாறி காணப்படும்.
மெக்ஸிகோவில் தான் முதல் முதலாக பயிரிடப்பட்டது என வரலாறு சொல்கிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவகாடோ உணவாக உட்கொள்ளப்பட்டதும், 5000 ஆண்டுகளாக மனிதர்களால் பயிரிடப்பட்டதற்குமான ஆதாரங்கள் உள்ளது. வட அமெரிக்காவில் போய் இறங்கிய ஸ்பானியர்கள் aguacate என்ற தங்கள் மொழியில் அழைக்க, அது மருவி அவகாடோவானது.
மஞ்சளும் பச்சையுமாக பூக்கும் அவகாடோ மர 66 அடி உயரம் வரை வளரும். நூறு கிராமில் இருந்து ஒரு கிலோ வரை ஒரு பழம் இருக்கும். இங்கே நான் வசிக்கும் ஸ்வீடனில் 200 முதல் 300 ரூபாய் வரை ஒரே பழம் - 400 கிராம் வரை இருக்கும். (அதில் கொட்டை 100 கிராம் வரை இருக்கும்). பனி பொழியக்கூடது, மெல்லிய காற்று இருக்கனும், இதமான கிளைமேட் இருக்கனும் என பல கண்டிஷன்கள் இருப்பதால் நம்ம ஊர்ல குளிர் பிரதேசங்களிலும், மெக்ஸிக்கோ, டொமினிக்கன் ரிபப்ளிக், கொலம்பியா, பெரு, ஸ்பெயின், போர்ச்சுக்கல், சிலி, சவுத் ஆப்ரிக்கா, கரீபியன் தீவுகள், பிலிப்பைன்ஸ், இலங்கை, சிலி போன்ற உலகின் பல நாடுகளில் விளைகிறது அவக்காடோ.
மோனோசாச்சுரேட்டட் வகை கொழுப்பு (அதாங்க நல்ல கொழுப்பு) அடங்கிய அவக்காடோவை நம் குழுமம் உண்ணுமாறு வலியுறுத்துவது பற்றி நீங்கள் அறிவீர்கள். அவக்காடோ எண்ணை கூட கிடைக்குது. அதிக ஸ்மோக்கிங் பாயிண்ட் உள்ள அவக்காடோ எண்ணை கொஞ்சம் விலை அதிகம். (ஆனா நம்ம தேங்காய் எண்ணையோடு போட்டி போட முடியாதுங்கோவ்).
சிலபேர் - உவ்வே இதை போய் எப்படிங்க சாப்பிடுறது ரொம்ப துவர்ப்பா இருக்குன்னு சொல்லுவாங்க. (பழுக்காத பச்சை காயை சாப்பிட்டு டென்ஷன் ஆனவங்களும் உண்டு). பழுத்த அவக்காடோ கொஞ்சம் சுவை இல்லாமல் தான் இருக்கும் (சிலருக்கு). ஆனால் மெக்ஸிக்கன் சாலட் மாதிரி செய்து சாப்பிட்டால் சுவை சும்மா அமோகமா இருக்கும்.
மெக்ஸிக்கன் சாலட் செய்முறை
நன்கு பழுத்த அவக்காடோ - 2 (கொட்டை நீக்கி, தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்)
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
அரை சிட்டிகை மிளகாய்தூள், ஒரு டீ ஸ்பூன் உப்பு, ரெண்டு டீஸ்பூன் பெப்பர் பவுடர் ( பெப்பர் இடித்தும் உடைத்தும் கூட போட்டலாம்).
வெள்ளரி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் நறுக்கி போட்டுக்கொள்ளவும்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
அரை சிட்டிகை மிளகாய்தூள், ஒரு டீ ஸ்பூன் உப்பு, ரெண்டு டீஸ்பூன் பெப்பர் பவுடர் ( பெப்பர் இடித்தும் உடைத்தும் கூட போட்டலாம்).
வெள்ளரி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் நறுக்கி போட்டுக்கொள்ளவும்
அப்படியே பெரிய கரண்டியை வைத்து நன்றாக மிக்ஸ் செய்யவும். ரொம்ப கொழகொழவெனவும் இல்லாமல், ரொம்ப கட்டி கட்டியாகவும் இல்லாமல். சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க எப்படி இருக்கு என..
அவக்காடோவின் சத்துக்கள் பற்றி..100 கிராம் அவகாடோவில் - கலோரிகள் - 160 kcal ((எனர்ஜி 670 kJ)
கொழுப்பு (நல்ல கொழுப்புங்க) - 15 கிராம்
சோடியம் - 8 மில்லி கிராம்
பொட்டாஷியம் - 465 மில்லி கிராம்
கார்போகைட்டிரேட் - 1 கிராம்
டயட்டரி பைபர் - 7 கிராம்
புரோட்டீன் - 2 கிராம்
வைட்டமின் ஏ - 2 சதவீதம்
வைட்டமின் சி - 15 சதவீதம்
கால்சியம் - 1 சதவீதம்
இரும்பு சத்து - 3 சதவீதம்
வைட்டமின் ஈ - 4 சதவீதம்
வைட்டமின் பி6 - 4 சதவீதம்
மாங்கனீசு - 2 சதவீதம்
மக்னீசியம் - 2 சதவீதம்
காப்பர் - 2 சதவீதம்,
ஜிங்க் - 2 சதவீதம்
தயமின் - 2 சதவீதம்
நியாசின் - 4 சதவீதம்
போலேட் - 6 சதவீதம்,
பாஸ்பரஸ் - 2 சதவீதம்..
சோடியம் - 8 மில்லி கிராம்
பொட்டாஷியம் - 465 மில்லி கிராம்
கார்போகைட்டிரேட் - 1 கிராம்
டயட்டரி பைபர் - 7 கிராம்
புரோட்டீன் - 2 கிராம்
வைட்டமின் ஏ - 2 சதவீதம்
வைட்டமின் சி - 15 சதவீதம்
கால்சியம் - 1 சதவீதம்
இரும்பு சத்து - 3 சதவீதம்
வைட்டமின் ஈ - 4 சதவீதம்
வைட்டமின் பி6 - 4 சதவீதம்
மாங்கனீசு - 2 சதவீதம்
மக்னீசியம் - 2 சதவீதம்
காப்பர் - 2 சதவீதம்,
ஜிங்க் - 2 சதவீதம்
தயமின் - 2 சதவீதம்
நியாசின் - 4 சதவீதம்
போலேட் - 6 சதவீதம்,
பாஸ்பரஸ் - 2 சதவீதம்..
என அத்தனை சத்துக்களும் கொட்டிக்கிடக்கும் இந்த அவக்காடோ / பட்டர் ப்ரூட் / வெண்ணைப்பழத்தை ஏன் நம் குழுவின் தலைவர் செல்வன் ஜி நம் டயட்டில் சேர்த்தார் என்று புரிகிறதா ? நம் டயட்டில் ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்கள், அவகாடோ ஒரு வேளை உணவில் சேர்த்துக்கொண்டாலோ, அல்லது ஸ்னாக் ஆக உண்டாலோ பசி மிகவும் மட்டுப்படும். சார் / மேடம் எங்க கிளம்பிட்டீங்க ? அவக்காடோ வாங்கவா ? கோயம்பேட்டில் கிடைக்குதாம். நம் குழுவை சேர்ந்த நன்பர்கள் ஆர்டர் பண்ணா வீட்டுக்கே அனுப்புறாங்களாம். விசாரிச்சுக்கோங்க...
நம் குழுவில் இருக்கும் தோழி வைஷாலி சொல்றாங்க, ஒரு பிரவுன் பையில் மூடி, இருட்டன இடத்தில் வைத்தால் பழுத்துவிடுமாம் விரைவில்.
அவகாடோ சாப்பிட்ட பிறகு கொட்டைகளை எல்லாம் ஒரு சுத்தமாக்கி ஒரு பாட்டில்ல போட்டு வைங்க. பிறகு அதை உடைச்சு மிக்ஸியில் அடிச்சு பொடியாக்கி, ஸ்மூதியில் கலந்து சாப்பிடலாமாம். அவகாடோவில் இருக்கும் அத்தனை சத்துக்களும் இதிலும் இருக்காம். (மிக்ஸியில் போடும் முன் உடைக்க மறக்கவேண்டாம். இல்லை என்றால் மிக்ஸி ப்ளேடு உடைந்துவிடும்)
படங்கள், தகவல் : விக்கிபீடியா மற்றும் avocadocentral டாட் காம்.
ஆரோக்கியம் & நல்வாழ்வு, மக்கள் உணவு, சர்க்கரையில்லா பொங்கல் (Ancestral Foods) பேஸ்புக் குழுமங்களுக்காக எழுதப்பட்டது.



0 comments:
Post a Comment