பேலியோ கட்லட்
தேவையான பொருட்கள்:
சர்க்கரை வள்ளிக் கிழங்கு
கேரட்
வெங்காயம்
இஞ்சி
மல்லி இலை
வெண்ணெய்
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
கரம் மசாலா தூள்
பாதாம் பவுடர்
ப்ளக்ஸ்சீட் பவுடர்
செய்முறை:
* சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கேரட் இரண்டையும் வேக வைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும்.
* வாணலியில் வெண்ணெய் போட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும்மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்கரம் மசாலா தூள், உப்பு, மசித்த கலவை சேர்த்து நன்கு கிளறவும். பின் நறுக்கிய மல்லி இலைசேர்க்கவும்.
* ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி இலேசாக தட்டி பாதாம், ப்ளக்ஸ்சீட் பவுடரில் தேய்த்து மிதமான தீயில் தோசைகல்லில்போட்டு சுட்டு எடுக்கவும். சுவையான கட்லட் தயார்.
இந்த சுவையான பேலியோ கட்லட் சமையல் முறையையும், அதனை தமிழாக்கம் செய்து அனுப்பிய "Shanthi Pettai"அவர்களுக்கு நன்றி :)


0 comments:
Post a Comment