உணவு முறை மாற்றம் தொடங்கியவர்களுக்கு மூன்று நாட்களில் தலைவலி வரும். சின்னதாக சுரம் கூட வரும். இதன் பெயர் கார்ப் ப்ளூ. லெமன் வாட்டர் குடித்து பொறுத்துக்கொள்ளவும். உங்கள் உடல் புதிய உணவு முறைக்கு தயாராகிறது.
------------------
யூரிக் ஆசிட் பிரச்சனைகள் உள்ளவர்கள் சிகப்பிறைச்சி, உள்ளுறுப்புகள் (ஈரல்), மஷ்ரூம், மீன் போன்ற கடல் உணவுகள் தவிர்க்கவேண்டும்.
------------------
நம் குழுவில் அனுமதிக்கப்படும் ஒரே பழம் அவக்காடோ / வெண்ணைப்பழம். இன்னொரு பழம் (?) கொய்யா (பழமாக சாப்பிடக்கூடாது, காயாக மட்டும் சாப்பிடவேண்டும்).
------------------
செக்கில் ஆட்டிய எண்ணைகள் ஸ்டாக் தீர்ந்துபோனால் மீந்துபோன ரீபைண்ட் ஆயில் பாட்டிலை எடுக்கவேண்டாம். சமையலுக்கு நெய் பயன்படுத்தவும். செக்கில் ஆட்டிய எண்ணையை விட நெய் பெட்டர்.
------------------
வெண்ணையை பார்த்து பயம் வேண்டாம். உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆயர்பாடியில் கண்ணன் திருடித்தின்ற உணவு அய்யா. வெண்ணை ஆபத்து என்று உங்களை ஏமாற்றிவிட்டார்கள். வெண்ணையில் செய்த ஆம்லேட் சுவை அமோகமாக இருக்கும்.
------------------
முட்டையை அவித்து தான் உண்ணவேண்டும் என்பதல்ல. ஆம்லேட், ஆப்பாயில், எக்-புர்ஜி (கலக்கி), மசாலா ஆம்லேட் என வகை வகையாக உண்ணலாம். எடுங்கள் அந்த 28 வகை முட்டை ரெஸிப்பிகள் சமையல் புத்தகத்தை..
------------------
எண்ணையில் பொரித்து எதையும் உண்ணவேண்டாம். (செக்கில் ஆட்டிய எண்ணையாக இருந்தாலும்). மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வைத்துக்கொள்ளவும். ஷாலோ ப்ரை செய்யலாம். (ஷாலோ ப்ரை என்பது ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு தோசைக்கல்லில் பிரட்டி எடுப்பது..
------------------
வெளியூர் பயணங்களின் போது பாதாம் நெய்யில் வறுத்து பேக் செய்துகொண்டால் ஒரு வேளை சமாளிக்கலாம். உணவகத்தில் போய் அமர்ந்து ரெண்டு டபுள் ஆம்லேட், அப்புறம் ஒரு ஆப் பாயில் குடுத்திருங்க என்று ஆர்டர் செய்து சப்ளையருக்கு கிலி ஏற்றினால் இன்னொரு வேளை சமாளிக்கலாம். ஒரு வேளை வயிற்றை காயப்போட்டால் மூன்றாவது வேளை.
------------------
வாரம் ஒரு முறை காலையில் இருந்து மதியம் வரை குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காகவோ, விருப்பமான தெய்வத்தையோ, பிடித்த அரசியல் தலைவரையோ அல்லது சினிமா நடிகரையோ நினைத்து உண்ணாவிரதம் இருக்கலாம். இதற்கு இன்டர்மிட்டென்டன்ட் பாஸ்டிங் என்று பெயர். இதன் மூலம் மிகச்சிறந்த பலன் கிடைக்கும்.
------------------
எடை இழப்பு வேண்டாம், போதுமான எடை இருக்கிறேன் என நினைப்பவர்கள் தினம் ஒரு உருளை கிழங்கை அவித்து சாப்பிட்டால் எடை இழப்பு நின்றுபோகும்.
------------------
போதுமான அளவோ, போதும் போதும் என்றோ தண்ணீர் குடிக்கலாம். 3 முதல் 4 லிட்டர். தாகம் ஏற்படும்போதெல்லாம் குடிக்கலாம்.
------------------
பெரிய நெல்லிக்காய் கிடைத்தால் தினமும் ஒன்று சாப்பிடலாம்.
------------------
கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுப்பவர்கள் லைம் ஜூஸ் தினமும் எடுப்பதை தவிர்க்கவேண்டும்.
------------------
பூண்டு தினமும் சாப்பிடுபவர்கள் அதனை சிறு துண்டுகளாக வெட்டி வைத்துவிட்டு பத்து நிமிடம் கழித்து சாப்பிடவேண்டும். (அப்போது தான் அதில் இருக்கும் அலிசின் வெளிப்படும்). தினம் காலை சாப்பிடும் பூண்டின் அளவு இரண்டு என்ற அளவில் வைத்துக்கொள்ளுங்கள்.

0 comments:
Post a Comment