பல்லுக்கு பாதகமான உணவுகள்..
1. ஐஸ்கட்டி...வெறும் நீர் மட்டுமே உள்ள சாதா ஐஸ்கட்டியானாலும் சரி கட, முடா என பல்லில் வைத்து கடித்து சாப்பிடுவதால் பல்லில் உள்ள எனாமல் பாதிப்படைகிறது. கூட சுகர், சாயம் எல்லாம் இருந்தால் இன்னும் சுத்தம்
2. உலர் பழங்கள்: பேரிச்சை, திராச்சை முதலான உலர்பழங்களை உண்கையில் அதில் ஏராளமான சுகர் உள்ளது. இயற்கையான பழங்களை உண்கையில் அதில் உள்ள நீரும் இதில் கிடையாது என்பதால் பழசர்க்கரை பல்லில் படிந்து அசிடிட்டியை உருவாக்கும் பாக்டிரியாவை பல்லில் உருவாக்கி பல்லை கெடுத்துவிடுகிறது
3. பிரெட்/தோசை/பூரி/சப்பாத்தி முதலானவை.....இவை முழுக்க ஸ்டார்ச் என்பதால் நம் எச்சில் அதை உடைத்து வாயிலேயே அதை சுகராக மாற்றி பேஸ்ட் மாதிரி பல்லில் படிய வைக்கிறது. பாக்டிரியாவுக்கு கொண்டாட்டமோ, கொண்டாட்டம் தான்
4. மது..மது அருந்துவதால் வாயில் எச்சில் ஊறுவது குறைகிறது. எச்சில் ஊறுவதுதான் ஜீரணத்துக்கும் நல்லது. எச்சில் ஊறுவது குறைந்தால் ஏராளமான பல் வியாதிகள் வரும்
5. கார்ப்பனேட்டட் பானங்கள்: கோக்/பெப்ஸி முதலானவை பற்களை சர்க்கரையால் குளிப்பாட்டுகின்றன. பெப்ஸி/கோக் அடிக்கடி குடித்தால் உங்கள் வாயே பாக்டிரியாக்களின் நிரந்தர வாசஸ்தலமாக மாறிவிடும். சுகர் இல்லாத டயட் கோக் குடித்தாலும் அதில் உள்ள ஆசிட் உங்கள் பல் எனாமலை பதம் பார்த்துவிடும்.
6. சாக்லட்/ இனிப்பு முதலானவை..இதற்கு விளக்கமே வேண்டியதில்லை
7. வினிகர்: வினிகர் உடலுக்கு நல்லதெனினும் வினிகர் முழுக்க அசிடிட்டி அதிகம் என்பதை நினைவில் கொள்க. வினிகர் நேரடியாக பல்லில் பட்டால் பல் எனாமல் கரைந்துவிடும். அதனால் நீரில் கரைத்து பருகி உடனே வாயை கொப்புளிக்க வேண்டும்
பல் பாதுகாப்பு:
தானியம், பழம் தவிர்த்த பேலியோவில் பல்லுக்கு முழு பாதுகாப்பும் கிடைக்கும்.
பல் துலக்குகையில் 2 நிமிடத்துக்கு குறையாமல் பல் துலக்க வேண்டும்
பிளாஸிங் செய்வது அவசியம். பேலியோவில் பிளாசின்க் என்பது பல்லிடுக்கில் சிக்கிய இறைச்சிதுண்டுகளை குச்சியால் குத்தி எடுப்பதே. ஆக அதை அவசியம் செய்யவேண்டும்.
மவுத்வாஷ் அவசியம் இல்லை. அதில் இருப்பது வெறும் ஆல்கஹாலே. மது பல்லுக்கு எப்படி கெடுதி என்பதை பார்த்தோம். தினமும் மவுத்வாஷ் பயன்படுத்தினால் வாய் ட்ரை ஆகிவிடும். பல்லும் கெடும். மவுத்வாஷ் என்பது துர்நாற்றம் வராமல் இருக்க பயன்படுவதே...பேலியோவில் துர்நாற்றம் வராது என்பதால் மவுத்வாஷ் அவசியம் இல்லை.
காமன் மேன் உணவில் இருப்பவர்கள்:
அரிசி, பழம், இனிப்பு உண்டவுடன் வாயை நன்றாக கொப்புளித்து பிளாஸ் செய்யவேண்டும். அதன்பின் பிரஷ் செய்யவேண்டும். வாயில் இனிப்பு இருக்கையில் பேஸ்டை போட்டு பல்லும் துலக்கினால் இனிப்பு நன்றாக வாயெங்கும் பரவிவிடும். ஆக தினம் எத்தனை முறை காமன் மேன் உணவு மற்றும் டீ, காபி பருகுகிறீர்களோ அத்தனை முறை பல்துலக்குதலும், பிளாஸ் செய்தலும் அவசியம்.
பேலியோவில் இறைச்சி உண்டபின் அதை குத்தி எடுத்து வாய் கொப்புளித்தால் போதும். ஒவ்வொரு வேளை உணவுக்கு பின்னரும் பல் துலக்கும் அவசியம் இல்லை.

0 comments:
Post a Comment