நேற்று எழுதியது போல் முட்டை ஓடுகளில் இருந்து கால்ஷியம் சப்ளிமெண்ட் இன்று தயாரித்தேன். முட்டை ஓடுகள் முழுக்க, முழுக்க கால்ஷியம் தான். அதில் உள்ள கால்ஷியம், கால்ஷியம் கார்பனேட் எனும் வகையை சேர்ந்த கால்ஷியம். இது நம் உடலுக்கு மிக, மிக பரிச்சயமான வகை கால்ஷியம். காரணம் நம் எலும்புகள், பற்கள் எல்லாம் கால்ஷியம் கார்பனேடால் ஆனவையே. ஆக இதில் உள்ள கால்ஷியம் உடலால் எளிதில் கிரகிக்கபட கூடிய தன்மையும் கொண்டது. கடைகளில் விற்கும் கால்ஷியம் சப்ளிமெண்ட்டும், வெற்றிலை போடுகையில் போடும் சுண்ணாம்பும் பாறையில் இருந்து கிடைக்கும் கால்ஷியம் வகையறாக்கள். இவற்றை நம் உடலால் ஜீரணிக்க முடிவது இல்லை. கால்ஷியம் சப்ளிமெண்ட் சாப்பிட்டோம் என பெயர் தானே ஒழிய இவற்றை தொடர்ந்து உண்டுவந்தால் கிட்னியில் கல் வந்துவிடும்
ஆர்கானிக் அல்லது நாட்டுகோழி முட்டை ஓடுகளை மட்டும் பயன்படுத்தவும். இரு நாட்களாக 12 முட்டை ஓடுகளை சேர்த்து வந்தேன். முட்டை ஓடுகளை உடனடியாக கழுவி, வெநீரில் கொதிக்க விட்டு நன்றாக காயவைத்து சேமித்து வந்தேன். வெநீரில் கொதிக்கவிடுவது அதில் உள்ள கிருமிகளை கொன்றுவிடுகிறது. முட்டை ஓட்டில் உள்ள ஜவ்வு மூட்டுவலி இருப்பவர்களுக்கு மிக நல்ல மருந்து என்பதால் அதை வீசாமல் இருக்கவேண்டும்.
12 முட்டை ஓடு இப்படி சேர்ந்ததும், அதை அவனில் 200 டிகிரி வெப்பத்தில் 10 நிமிடம் வைத்தேன். மிக நன்றாக காய்ந்ததும் அதை பொடியாக்க காபி கிரைண்டர் இருந்தால் மிக நல்லது. ஆனால் வீட்டில் காபி கிரைண்டர் இல்லை. அதை எதற்கு $14 கொடுத்து வாங்கணும் என பாக்கு இடிக்கும் கருவியால் பொடியாக்கியதில் சுமார் 30 நிமிடம் பிடித்தது. ஆனால் அதன்பின் சுமார் 15 டிஸ்பூன் முட்டை ஓடு கால்ஷியம் கிடைத்தது.
ஒரே ஒரு டிஸ்பூன் முட்டை ஓட்டில் சுமார் 3600 மிகி கால்ஷியம் உள்ளது. அரசு பரிந்துரைக்கும் அளவு 900 மிகி கால்ஷியம் மட்டுமே. ஆக தினம் ஒரே ஒரு கிராம் மட்டுமே இதில் இருந்து சாப்பிடமுடியும். ஒரு கிராமை எப்படி அளப்பது என தான் தெரியவில்லை
ஒரு கிராம் முட்டை ஓட்டில்
900 மிகி கால்ஷியம் (3.5 கப் பாலுக்கு சமம்)
96 மிகி மக்னிசியம் (25 கிராம் பாதாமுக்கு சமம். ஒரு நாளுக்கு தேவையான மக்னிசியம் 400 மிகி)
96 மிகி மக்னிசியம் (25 கிராம் பாதாமுக்கு சமம். ஒரு நாளுக்கு தேவையான மக்னிசியம் 400 மிகி)
ஆகிய இரு முக்கிய மூலாதார சத்துக்கள் உள்ளன.
நீரில் கரைத்து எளிதில் பருகலாம். ஆனால் ஓவர்டோஸ் ஆகாமல் 1 கிராம் எப்படி சபபிடுவது என தான் தெரியலை
இதனால் கால்ஷியத்துக்கு தினம் சீஸ் அல்லது பால் அருந்தும் செலவு மிச்சம் ஆகும். கெர்ரிகோல்ட் சீஸ் மட்டும் மாதம் $18 பக்கம் செலவு செய்தேன். இனி அது மிச்சம்.THANKS Neander Selvan




0 comments:
Post a Comment