கொலஸ்டிரால் ஆபத்தானது அல்ல. உடலுக்கு மிக முக்கியமான மூலப்பொருள் என்பதை அறிவோம்
தாவர உணவு எதிலும் இல்லை. மிருக உணவுகளான இறைச்சி, முட்டை, பால் போன்றவற்றிலேயே உள்ளது. கொலஸிடிரால் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்குள் உள்ள மெம்ப்ரேனை உற்பத்தி செய்ய அவசியமாகிறது. அது தவிர ஒவ்வொரு செல்லையும் "வாட்டர் ப்ரூப்" ஆக்கி செல்களை காப்பாற்றுகிறது. கொலஸ்டிரால் இல்லையெனில் எஸ்ட்ரோஜன், ப்ரொக்ரஸ்ட்ரோன், டெஸ்டஸ்டிரோன், அட்ரினலின், கார்ட்டிசோல், ப்ரக்னலீனலின் மற்றூம் வைட்டமின் டி எதுவும் உற்பத்தி ஆகாது
இதனால் நம் உடல் கொலஸ்டிராலை உற்பத்தி செய்ய பெருத்த முயற்சி எடுக்கிறது. இத்தனை பணிகளுக்கும் தினமும் 2000 மிகி கொலஸ்டிரால் தேவை. அதனால் நம் ஈரல் நம் உணவில் இருந்து கொலஸ்டிராலை உற்பத்தி செய்வதில் பெரும் ஆற்றலையும், நேரத்தையும் செலவழிக்கிறது. உணவில் இருந்து கொலஸ்டிரால் உற்பத்தி செய்வது எளிதான காரியம் அல்ல. அது ஒரு 30 ஸ்டெப் ப்ராசஸ். இதை செய்வதால் ஈரலுக்கு ஏகப்பட்ட வேலை..உணவின் மூலம் கொலஸ்டிரால் கிடைத்தால் ஈரலுக்கு ஏகப்பட்ட வேலை மிச்சமாவதுடன், அது புரதத்தை புராசஸ் செய்தல், பைல் உற்பத்தி செய்தல் போன்ற வேறு வேலைகளில் ஈடுபட முடியும்
ஆக எத்தனைக்கு எத்தனை கொலஸ்டிரால் நம் உணவில் அதிகம் இருக்கிறதோ அத்தனைக்கு அத்தனை நம் ஈரல் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருக்கும்
உணவின் மூலம் ஈரலுக்கு கொலஸ்டிராலை கொடுப்பது என்பது தினமும் ஐந்து மணிநேரம் கையால் துணி துவைக்கும் இல்லதரசிக்கு வாஷிங் மெஷின் வாங்கிகொடுப்பது மாதிரி என வைத்துக்கொள்ளுங்கள்..இதை செய்வதால் நம் ஈரலுக்கு மிகுந்த ஓய்வு கிடைக்கும்
தினம் தேவைப்படும் கொலஸ்டிரால் அளவு 2000 மிகி
சராசரி அமெரிக்க டயட்டில் கிடைக்கும் கொலஸ்டிரால் அளவு 400 மிகி. அரசு பரிந்துரைக்கும் அளவு 365 மிகி..இது போதவே போதாது.
ஆனால் சைவர்கள் தினம் 2 கப் பால் மட்டும் அருந்தினால் கிடைக்கும் கொலஸ்டிரால் அளவு வெறும் 50 மிகிதான்
அதே நாலு முட்டையை உணவில் சேர்த்தால் 800 மிகி கொலஸ்டிரால் கிடைக்கிறது
உடன் அரை கிலோ சிக்கன் சேர்த்தால் 500 மிகி கொலஸ்டிரால் கிடைக்கிறது
சைவ உணவை விட அசைவ உணவில் ஏகபட்ட அளவில் கொலஸ்டிரால் அதிகம் இருப்பதால் தான் சைவர்களுக்கு அதிக அளவில் ஹார்மோன் பிரச்சனைகள், ஃபேட்டி லிவர் பிரச்சனைகள் முதலானவை தோன்றுகின்றன.
இப்படி உடலில் உற்பத்தி ஆகும் கொலஸ்டிராலை செல்களுக்கும், மூளைக்கும் கொண்டு சேர்க்கும் வாகனமே எல்டிஎல். இப்படி எல்டிஎல் கொலஸ்டிராலை சுமந்து செல்வதால் தான் ஹார்மோன்கள் உற்பத்தி அனைத்தும் தவறாமல் நிகழ்கிறது. எல்.டி.எல் தான் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் ஆன்டிஆக்சிடண்டுகளையும் செல்களுக்கு கொண்டுபோய் சேர்க்கிறது
உடலில் கொலச்டிரால் அளவுகள் குறைந்தால் பைத்தியம் பிடித்தல், தற்கொலை எண்ணம் தோன்றுதல், ஹார்மோன் குறைபாடு, ஆண்மை குறைபாடு, மாரடைப்பு, ஸ்ட்ரோக் முதல் பல பிரச்சனைகள் தோன்றும்
ஆக உடலுக்கு இத்தனை முக்கிய மூலப்பொருளை ஆபத்தானது என ஒதுக்கி வைத்திருக்கும் விந்தையை என்னவென சொல்ல?

0 comments:
Post a Comment