நெத்தலி மீன் 1 கிலோ எடுத்து சிறிது கல்லுப்பு மஞ்சள் தூள் சேர்த்து மிக மிருதுவாக தேய்த்து உள்ளிருக்கும் முள்ளை உருவி எடுத்து , பின்னர் 2 முறை உப்பு போக கழுவிக்கொள்ளவும் ..
இஞ்சி பூண்டு விழுது,சோம்பு& சீரகம் & மிளகு & மஞ்சள் & மிளகாய் & வெந்தயம் & பெருங்காய தூள் ( அனைத்தும் வீட்டில் வறுத்து தனித்தனியாக அரைத்து வைத்துள்ளேன் ) உப்பு , ஒரு எலுமிச்சை புளிந்து நன்கு பிசறி வைக்கவும் , ஒரு மணி நேரத்திற்கு பிறகு , கடாயில் வெண்ணெய் சேர்த்து முடிந்த வரை மீன் உடையாமல் வதக்கி எடுக்கவும்..
சின்ன சின்ன பசிக்கு ஏற்றது..குழந்தைகளுக்கு கடை பலகாரங்கள் தவிர்த்து இது போன்றவற்றை பள்ளி விட்டு வந்ததும் செய்து கொடுங்களேன்


0 comments:
Post a Comment