Saturday, July 30, 2016

psoriasis க்கான பட முடிவு
சொரியாசிஸ் soriasis
சொரியாசிஸ் தோல்நோய் ஏன் வருகிறது, எதற்கு வருகிறது என சரியாக தெரியாது. ஆனால் இது வந்தால் நம் நோயெதிர்ப்பு சக்தி நம் தோலை வைரஸ் என நினைத்து தாக்க துவங்கும். இப்படி இம்யூன் சிஸ்டம் (நோயெதிர்ப்பு சக்தியால்) வரும் இது ஆடோஇம்யூன்ட் வியாதி என வகைபடுத்தபடும்.
80க்கும் மேற்பட்ட ஆட்டோஇம்யூன் வியாதிகள் உலகில் உள்ளன. சமீபகாலமாக சர்க்கரைக்கு கொடுக்கபடும் மெட்பார்மின் மருந்தை இவற்றில் சிலவற்றுக்கு கொடுக்க துவங்கி உள்ளார்கள். இம்யூன்ட் சிஸ்டத்தை குணப்படுத்த டயட் பெருமளவில் உதவும்.
இதுவரை இதுகுறீத்து நிகழ்த்தபட்ட ஆய்வுகள் கூறூவது என்னவெனில்
1) குறைந்த காலரி உணவு குண்டாக இருக்கும் ப்சொரியோசிஸ் பேஷண்டுகளின் உடல்நிலையில் முன்னேற்றத்தை காட்டுகிறது
2) சர்க்கரைக்கு கொடுக்கபடும் மெட்ஃபார்மின் ப்சொரியாசச்ஸுக்கு கொடுக்கபடலாம்
3) வைட்டமின் டீ3 ப்சொரியோசிசுக்கு மருந்தாக கொடுக்கப்டலாம். அது இம்யூன் சிஸ்டத்தை குணபடுத்தும்.
ப்சொரியோசிஸ் என இல்லாமல் தோல் வியாதிகள் குறித்து நிகழ்த்தபட்ட ஆய்வுகள் கூறூவது வைட்டமின் ஏ, டி3, ஈ ஆகியவை தோலுக்கு மிக முக்கியமானவை என.
ஆக துவக்க கட்டத்தில் நாம் முயலவேண்டியது
அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்களை முற்றிலும் தவிர்ப்பது
இம்யூன் சிஸ்டத்தை குணபடுத்துவது
எடையை கட்டுபாட்டில் வைப்பது
ஆக அனைத்து குப்பை உணவுகளும் முதலில் தவிர்க்கபடவேண்டும். வீட்டில் சமைக்காத எந்த உணவுப்பொருளும் பயன்படுத்த வேண்டாம். கேக், இனிப்பு, முறுக்கு, டீ, காபி அனைத்தும் நிறுத்தவேண்டும். வீட்டில் செய்ததாக இருந்தாலும்.
கோதுமை, மைதா பக்கம் அறவே போக கூடாது. கம்பு, சோளம் எல்லாம் தவிர்க்கவேண்டும்.
தவிர்க்கவேண்டிய காய்கறிகள்:
தக்காளி, கிழங்குவகைகள், கத்திரிக்காய், அனைத்து மசாலாபொருட்கள், கடுகு, மிளகு, மிளகாய்..
எந்த ஆயிலும் வேண்டாம். செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெய், செக்கில் ஆட்டிய ஆலிவ் ஆயில் மட்டுமே பயன்படுத்தவேண்டும். விதைகள் இதற்கு அலர்ஜி ஆனவை என்பதால் விதைமூலம் வரும் எந்த ஆயிலும் வேண்டாம். செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் கிடைப்பது சிரமம் தான். ஆனால் என்ன செய்ய? கிடைக்கவே இல்லை என்றால் நெய் மட்டும் பயன்படுத்தவும். பால் பொருட்கள் தவிர்க்கவும்.
விதையில் இருந்து கிடைக்கும் எதுவும் வேண்டாம் (வெந்தயம், பாதாம், நிலகடலை, எள், கடுகு..எக்ஸட்ரா)
பீன்ஸ், அவரை, சென்னா, பருப்பு பக்கமே போகவேண்டாம்.
அப்புறம் என்னதான் சாப்பிடுவது?
தினம் 1/2 மூடி தேங்காய்
காய்கறி சூப்/பொறியல் (மேலே எழுதின காய்கறிகளை தவிர்க்கவும்)
அவகாடோ பழம்
மீன் (பண்ணை மீன் தவிர்க்கவும். ஏரி,கடல் மீன்)
கோழி
புல்லுணவு மாமிசம் (ஆடு, எக்ஸ்ட்ரா..)
தினம் 200 கிராம் கீரை
நாட்டுகோழி முட்டையின் ஆம்லட்
கால்ஷியம் மட்டும் பிரச்சனை ஆகும். மத்தி/ நெத்திலி மீனை சிறு எலும்புகளுடன் கடித்து உண்டால் கால்ஷியம் பிரச்சனை தீரும்.
மதியம் 11 முதல் 1 மணிவரையில் தலைக்கு தொப்பி அணிந்து வெயிலில் அரைமணிநேரம் நிறக்வும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது நிற்கவும். 1/2 டிரவுசர், கை வைக்காத பனியன் அணிந்தால் சிறப்பு. இது வைட்டமின் டி3 கிடைக்க உதவும்.
வாரம் ஒரு முறை கட்டாயம் ஆட்டு ஈரல் உண்ணவேண்டும்.
முதலில் ஒரு வாரம் இதை முயலவும். இது சிரமமான டயட் என்பதை சொல்லவேண்டியது இல்லை. உடனே குணம் ஆகும் என எதிர்பார்க்க முடியாது. முதல் வாரத்தில் டயட்டுக்கு உடல் எப்படி அட்ஜஸ்ட் ஆகிறது என்பதை பார்ப்போம். அதன்பின் பிரஷர், எடை இறங்க, இறங்க சொரொயாசிஸும் கட்டுபாட்டில் வரும்
psoriasis க்கான பட முடிவு
இதுவரை 7 ஆண்டுகளாக பார்க்காத டாக்டர்கள் இல்லை. போகாத மருத்துவ முறைகள் இல்லை. அலோபதி, ஹோமியோபதி, யுனானி, சித்தா எல்லாம் பார்த்தாகிவிட்டது.
அனைத்து மருத்துவ முறைகளும் நோயை வெளியே தெரியாமல் அமுக்கியே வைத்திருந்தன. குணப்படுத்தவில்லை. சிறிது காலம் மருந்து எடுக்காவிட்டாலும் மீண்டும் நோய் தலைதூக்கியது.
தானியங்களை தவிர்க்கவேண்டும், ஜங் புட், கோக், பெப்சி, சர்க்கரை, பேக்கரி பொருட்கள் தவிர்க்கவேண்டும் என யாரும் கூறவில்லை.
அனைவரும் கூறிய பத்தியம் ஒன்றுதான், மாமிசம், மீன், கோழி, கருவாடு, கத்தரிக்காய் தவிர்க்கவேண்டும் என கூறினார்கள்.
இவர்களுக்கு உணவியல், மனிதஉடற்கூறியல் பற்றி தெரியுமா அல்லது வேண்டுமென்றே உண்மையை மறைக்கிறார்களா என தெரியவில்லை.
குறைந்த பட்சம் சர்க்கரையை தவிர்க்கவேண்டும் என்ற அடிப்படை உண்மையையாவது கூறியிருக்கலாம்.
ஏதோ ஓரளவுக்கு படித்த, சமூக வலைதளங்களில் தகவல் திரட்டும் எனக்கே சில அடிப்படை உண்மைகளை விளங்க 7 ஆண்டுகள் பிடித்தன என்றால் எத்தனையோ ஏழைகள், பாமரர்கள், விபரம் அறியா அப்பாவிகள் விபரம் அறிய எத்தனை காலம் ஆகும். அதுவரை அவர்கள் பொன்முட்டை இடும் வாத்துகள்.
எனது அலோபதி மருத்துவரும், சித்தா மருத்துவரும் எனது நோயை அவர்களின் பொருட்களை விற்கும் சந்தையாகவே பார்த்தார்கள். மருந்து போக சோப்பு, ஷாம்பூ, கிரீம், தலைக்கு ஆயில் எல்லாம் அவர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும். வாங்க முடியும், ஏன் என்றால் வேறு எங்கும் அந்த பொருட்கள் கிடைக்காது.
நான் எல்லா மருத்துவர்களையும் குறை சொல்லவில்லை, ஒரு சிலர் இது தீர்க்க முடியாத வியாதி, நீங்கள் இருக்கும் வரை இந்த நோய் உங்களுடன் இருக்கும், என கூறி நோயோடு அனுசரித்து வாழ்ந்துகொள்ள அறிவுரை கூறினார்கள்.
இப்போதுதான் என் சித்தா டாக்டர் போன் செய்தார், மருந்து தீர்ந்து ஒருவாரம் ஆகிஇருக்குமே, ஏன் மருந்து வாங்க வரவில்லை என் கேட்டார். அவர் இன்று ஏதோ வெளியூர் செல்வதாகவும் திரும்பிவர 1 வாரம் ஆகும். சிக்கிரம் வந்து மருந்து வாங்கிக்கொள்ள சொன்னார். நான் கையில் இப்போது காசில்லை, அடுத்த வாரம் வந்து வாங்கிக்கொள்கிறேன் என சொல்லிவிட்டேன்.
பேலியோ உணவு முறை பற்றி கூறிய போது எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. ஏன் என்றால் இது அவர்களின் உணவுமுறைக்கு நேர்எதிராக இருந்தது. இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற மனநிலையோடு, போய்தான் பார்ப்போமே என வந்தேன். நம்ப முடியாத மாற்றம்.
ஒரு வாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்:- வாய் துர்நாற்றம் போய்விட்டது.- மலச்சிக்கல் போய்விட்டது.- சோம்பல் போய்விட்டது.- ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ளது.- உடல் அரிப்பு குறைந்துவிட்டது.- சோரியாசிஸ் புண்கள் ஆற தொடங்கிவிட்டன.
பேலியோ ஆரம்பித்து சில நாட்களில் பல நல்ல மாற்றங்கள் கண்கூடாக தெரிகின்றன. மேலும் சில நாட்களில் பலப்பல மாற்றங்கள் நடக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

Diet:

காலை எழுந்தவுடன் 3 கிளாஸ் வெந்நீர். பின்பு 30 நிமிடம் நடைபயிற்சி. காலை உணவு: அரை மூடி தேங்காய் அல்லது உப்பு போட்ட லெமன் ஜூஸ் அல்லது 2 நாட்டுக்கோழி முட்டை ஆம்லேட். மதிய உணவு: வெண்டைக்காய் (அ) சுரைக்காய் (அ) பாகக்காய் (அ) ஏதேனும் காயை வேக வைத்து சாப்பிடுவேன் (அ) ஏதேனும் கீரை சாப்பிடுவேன். கால் கிலோ அளவு. இரவு உணவு: கால் கிலோ மட்டன் (அ) கோழிக்கறி (அ) ஏதேனும் காய் மட்டும் வேகவைத்து சாப்பிட்டேன். பெரிய வித்யாசமான உணவுமுறை ஏதும் இல்லை. சர்க்கரை, பால் பொருட்கள், அரிசி, கோதுமை (அ) தானிய உணவுகளை சுத்தமாக தவிர்த்தேன். ஜங் புட், பிஸ்கட்ஸ், சிப்ஸ், போண்டா/பஜ்ஜி, கோக், பெப்சி, பேக்கரி பொருட்களை 1 மாதம் முன்பே நிறுத்திவிட்டேன். சோரியாசிஸ்க்கு மேல்பூச்சாக தேங்காய் எண்ணெய் மட்டும் பூசினேன். 2 ஞாயிற்றுக்கிழமை மட்டும் வெயிலில் நின்றேன். இது மட்டும் தான் நான் செய்தேன். வேறு எதுவும் செய்யவில்லை. செல்வன் ஜி சொன்னவற்றில் பாதி அளவுக்குத்தான் பின்பற்றினேன். அதிலேயே நல்ல மாற்றம் தெரிகிறது. “பிரஷர், எடை இறங்க, இறங்க சொரொயாசிஸும் கட்டுபாட்டில் வரும்” என்ற இந்த வார்த்தை என் மனதில் பசுமரத்தாணியாக பதிந்து விட்டது. அளவுக்கு அதிகமான அரிசி உணவை விட்டுவிட்டு, அளவாக காய்கறி, மாமிசம் சாப்பிட்டேன். உடல் அரிப்பு குறைத்துவிட்டது. சோரியாசிஸ் புண்கள் வாட்டமாக உள்ளது. மாற்றம் கண்கூடாக தெரிகிறது.


சோரியாசிஸிக்கு நன்றி நன்றி நன்றி.....

சோரியாசிஸ் வர காரணம் என்ன?

அலோபதி: ஆட்டோஇம்யூன் வியாதி, பரம்பரை நோயோ அல்லது தொற்று நோயோ இல்லை ஆனால் நோய்க்கான காரணம் தெரியவில்லை.
சித்தா: பித்தம், கபம், வாதத்தில் ஏற்பட்ட சமநிலையற்ற தன்மை. உடலில் உள்ள ரத்தம் மாசாகி போதல்.
ஹோமியோபதி: கடும் மனஅழுத்தம் மற்றும் டென்ஷனால் உடலில் ஏற்படும் மாற்றம்.
ஆயூர்வேதா: மாபாதகம் செய்தல் மற்றும் முன்னோர்களை நிந்தித்ததால் வந்த வினை.
மேலே சொன்ன காரணங்கள் எனக்கு அந்தந்த மருத்துவர்களால் சொல்லப்பட்டவை. எது எப்படியோ என்னை இங்கு கொண்டு வந்த சோரியாசிஸ் நோய்க்கு முதலில் நன்றி.
எந்த மனிதனும் துன்பம் வரும் போது மட்டுமே கடவுளை நாடுகிறான், நோய் வரும் போது மட்டுமே பத்தியம் இருக்கிறான். ஆனால் எப்படி பத்தியம் இருந்தால் நோய் குணமாகும் என்று தெரிந்து கொள்வதில் தான் பிரச்னையே.
நான் ஸ்ரீநிவாசன், பெயருக்கு ஏற்றபடி அளவற்ற சர்க்கரையுடன் என் கிராமத்தில் வாழ்ந்துவந்தேன். அதிகாலை சைக்கிளில் வயக்காடு சென்று சிறிது வேலைகளை முடித்து விட்டு பள்ளிக்கு சைக்கிளில் செல்வேன். நான் சாப்பாடு ராமன். முறம் சோறு, படி குழம்பு சாப்பிடுவேன். குழம்பு சோற்றுக்கு கூட வெல்லம் கடித்துக்கொண்டு சாப்பிடுவேன்.
2004 ஆம் ஆண்டு நான் திருச்சியில் தங்கி படிக்கும் போது எனக்கு சோரியாசிஸ் மெல்ல எட்டிப்பார்த்தது, அப்போதேல்லாம் பெரிய உடல் உழைப்பு இல்லை. 2-3 வருடங்கள் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்போது என் உணவு காலை எழுந்தவுடன் திருச்சி புகழ் இனிப்புசீயம் அல்லது யானபூந்தி மற்றும் சர்க்கரை தூக்கலாக டீ. காலை உணவு உறையூர் இறைவன் கடை வெண்பொங்கல் மற்றும் வடை. மதியம் சாப்பாடு, இரவு சாப்பாடு. மாலை வேளையில் வடை, பஜ்ஜி. மருத்துக்கு கூட பழங்களோ, காய்கறிகளோ சாப்பிடவில்லை.
முதன் முறையாக திருச்சியில் அலோபதி டாக்டரிடம் சென்றேன், நான் இது ஏதோ 5-6 நாள் மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும் நோய் என எண்ணி இருந்தேன். சரியாகவில்லை.
சித்தா டாக்டரிடம் சென்றேன், அவர் 15 நாட்களுக்கு மருந்து வேண்டுமா இல்லை 30 நாட்களுக்கு மருந்து வேண்டுமா என கேட்டபோதுதான் இதன் தீவிரம் எனக்கு சற்று தெரிய ஆரம்பித்தது.
2006 ஆம் ஆண்டு கோவையில் தங்கி படித்தேன். அங்கும் அலோபதி, சரியாகாவிட்டால் வேறொரு அலோபதி பிறகு சித்தா என டாக்டர் மாறினார்கள், நோய் மாறவில்லை. நோய் மாற வேண்டும் என்றால் என் உணவை மாற்றவேண்டும் என எனக்கு தெரியவில்லை. யாரும் சொல்லவில்லை.
அனைவரும் சொன்னது ஒன்றுதான், மாமிசம், மீன், கோழி, கருவாடு. கத்தரிக்காய் சாப்பிடாதே என்றுதான். சர்க்கரை சாப்பிடாதே என்று யாரும் சொல்லவில்லை.
கடை சாப்பாடு தான். காலை சாப்பாடு, மதியம் சாப்பாடு, இரவு சாப்பாடு அல்லது சப்பாத்தி. 90% கார்ப்தான். 10% போண்டா, வடை, டீ.
பின் வேலை காரணமாக 2007லில் திருப்பூர் வந்தேன், கடும் பணிசூழல். காலை 7 மணிக்கு வேலைக்கு போய் இரவு 8 மணிக்கு வீடு திரும்பினால் “என்ன நேரமா வந்துட்ட” என கேட்பார்கள். மோகன் சின்னசாமி ஜி க்கு திருப்பூர் நிலவரம் தெரியும் என நினைக்கிறேன். வாரத்தில் 5 நாள் இரவு 12 மணி வரை வேலை. சனிக்கிழமை விடிநைட் வேலை. விடிநைட் என்றால் விடிய விடிய வேலை செய்துவிட்டு ஆர்டரை முடித்து கொடுத்துவிட்டு வரவேண்டும். காலை 8 மணி ஆகலாம் 10 மணி ஆகலாம். 12 மணிகூட ஆகலாம். பின்பு சண்டே ஹாலிடே.
என் உடல் நார் நாராய் கிழிந்தது திருப்பூரில் தான். 12 மணி நேரத்திற்கு மேல் தலைக்கு மேல் 1 அடி உயரத்தில் டியூப்லைட் சூட்டில் நின்றுகொண்டு வேலை செய்யவேண்டும். இங்கும் கடை சாப்பாடு தான். திருப்பூர் ஹோட்டல்களில் சாப்பாடு இருக்கும், நல்ல காரம் இருக்கும் வேற எதுவும் இருக்காது. சாணியை சாப்பாடு என கட்டி கொடுத்தால் கூட இங்கே வாங்கிச்செல்ல கூட்டமாய் வருவார்கள், ஏன் என்றால் சாப்பாடு செய்ய / பொறுமையாய் அமர்ந்து சாப்பிட நேரம் இல்லை, வேலை வேலை வேலை..
இங்கும் அலோபதி, சித்தா, அலோபதி என மாறினேன், என்ன புதிதாக ஹோமியோபதியையும், யூனானியையும் நடுநடுவே தொட்டுக்கொண்டேன். அப்போது மாதம் 3000 ரூபாய்க்கு மருந்து வாங்குவேன் என் மாதசம்பளம் 8000 ரூபாய்.
காலை உணவில் இட்லி/தோசை. மதியம் சாப்பாடு, இரவு சப்பாத்தி, இரவில் 5 பேரிச்சம்பழம், சர்க்கரை தூக்கலாக பால். ஒரு ரிலையன்ஸ் வாழைபழம். (அதாங்க மரபணுமாற்றம் செய்த ஏஸியில் பழுக்கவைத்த வாழைபழம்).
இங்கு ஒரு அலோபதி புண்ணியவானை கட்டாயம் குறிப்பிடவேண்டும், அவர் என்னை ஒரு நோயாளியாக, ஏன் ஒரு மனிதனாக கூட மதிக்கவில்லை. கையில் கூட தொட்டுப்பார்க்காமல் பேனாவில் தொட்டுபார்த்தார். சோரியாசிஸ் என்று சொன்னேன், அதை நீ சொல்லக்கூடாது டெஸ்ட் செய்து பார்க்கவேண்டும் என்றார். ஆயிரம் டெஸ்ட் செய்தவர் எனக்கு BP இருக்கிறதா என்ற அடிப்படை டெஸ்ட்ஐ கூட செய்யவில்லை.
சோப்பு, கிரீம், ஷாம்பூ, ஆயில்மெண்ட், மாத்திரை எல்லாம் அவரிடமே வாங்கினேன். என்ன வேணும்னாலும் சாப்பிட்டுக்கோ மாத்திரைகளையும் ரெகுலராக சாப்பிடு என்றார்.
எரியறதை புடுங்கினால் கொதிக்கறது தானா அடங்கிரும்னு தெரியாம /தெரிஞ்சுக்காம /தெரிவிக்கப்படாம அதிகமான இனிப்பையும் சாப்பிட்டுவிட்டு BP மாத்திரையையும் சாப்பிடும் கோமாளியாகவே நான் இருந்தேன்.
இப்ப ஓரளவுக்கு பீஸ்புல்லான வேலைல இருக்கேன். 08/06/2014 லில் என் காதல் மனைவியை திருமணம் செய்துகொண்டேன். திருமணம் செய்தால் திருப்பம் வரும் என சொல்வார்கள். திருப்பமாகவே “ஆரோக்கியம் & நல்வாழ்வு” குழுமத்தில் இணைந்தேன்.
செல்வன் ஜியிடம் ஆலோசனை பெற்றேன். உடனடியாக என்னால் பேலியோ உணவுக்கு மாற முடியாமல் போனாலும் ஜங் புட், கோக், பெப்சி, சர்க்கரை போன்றவற்றை குறைக்க ஆரம்பித்தேன்.
29/08/14 முதல் காலை எழுந்தவுடன் 3 கிளாஸ் வெந்நீர். பின்பு 30 நிமிடம் நடைபயிற்சி.
காலை உணவு:அரை மூடி தேங்காய் அல்லது உப்பு போட்ட லெமன் ஜூஸ் அல்லது 2 நாட்டுக்கோழி முட்டை ஆம்லேட்.
மதிய உணவு:வெண்டைக்காய் (அ) சுரைக்காய் (அ) பாகக்காய் (அ) ஏதேனும் காயை வேக வைத்து சாப்பிடுவேன் (அ) ஏதேனும் கீரை சாப்பிடுவேன். கால் கிலோ அளவு.
இரவு உணவு:கால் கிலோ மட்டன் (அ) கோழிக்கறி (அ) ஏதேனும் காய் மட்டும் வேகவைத்து சாப்பிட்டேன்.
பெரிய வித்யாசமான உணவுமுறை ஏதும் இல்லை. சர்க்கரை, பால் பொருட்கள், அரிசி, கோதுமை (அ) தானிய உணவுகளை சுத்தமாக தவிர்த்தேன்.
ஜங் புட், பிஸ்கட்ஸ், சிப்ஸ், போண்டா/பஜ்ஜி, கோக், பெப்சி, பேக்கரி பொருட்களை 1 மாதம் முன்பே நிறுத்திவிட்டேன்.
சோரியாசிஸ்க்கு மேல்பூச்சாக தேங்காய் எண்ணெய் மட்டும் பூசினேன். 2 ஞாயிற்றுக்கிழமை மட்டும் வெயிலில் நின்றேன்.
செல்வன் ஜி சொன்னவற்றில் பாதி அளவுக்குத்தான் பின்பற்றினேன். அதிலேயே நல்ல மாற்றம் தெரிகிறது.
“பிரஷர், எடை இறங்க, இறங்க சொரொயாசிஸும் கட்டுபாட்டில் வரும்” என்ற செல்வன் ஜி சொன்ன இந்த வார்த்தை என் மனதில் பசுமரத்தாணியாக பதிந்து விட்டது.
அளவுக்கு அதிகமான அரிசி உணவை விட்டுவிட்டு, அளவாக/ போதுமான காய்கறி, மாமிசம் மட்டும் சாப்பிடுகிறேன்.
உடல் அரிப்பு குறைத்துவிட்டது. சோரியாசிஸ் புண்கள் வாட்டமாக உள்ளது. மாற்றம் கண்கூடாக தெரிகிறது. புண்கள் முற்றாக ஆற 2 மாதம் பிடிக்கும் என நினைக்கிறேன்.
எனக்கு உதவிய செல்வன் ஜிகும், மற்றும் வாழ்த்திய அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

0 comments:

Post a Comment

Like Us Facebook

Categories

Unordered List

Sample Text

Blog Archive

Subscribe Via Email

Sign up for our newsletter, and well send you news and tutorials on web design, coding, business, and more! You'll also receive these great gifts:

Blog Archive

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Social Icons

Pages

BTemplates.com

Popular Posts

Popular Posts

Slider[Style1]

Find Us On Facebook

About us

Video Of Day

Popular Posts

Recent Posts

Text Widget