ப்ரோட்டின் அதிகமா சாப்பிட்டா கிட்னி கெட்டுபோயிடும் என படித்து பீதியடைகிறோம்
அது எந்த ப்ரோட்டீன்?
புரதத்தில் இருவகை..ஒன்று மிருக புரதம், இன்னொன்று தாவர புரதம்
புரதம் என்பதே 20 வகை அமினோ அமிலங்களின் கலவையே...இந்த 20ம் சரிவிக்த அளவில் இருந்தால் தான் அப்புரதம் முழுமையான புரதமாகும். 20ல் ஒன்று கூட, ஒன்று குறைய இருந்தால் அப்புரதத்தின் பெரும்பங்கு வீண் தான் ஆகும்.
தாவர புரதங்கள் எவையுமே முழுமையானவை அல்ல. அதாவது அவற்றில் இந்த 20 அமினோ அமிலங்களும் முழுமையாக இல்லை. அதனால் 1 கிராம் அரிசி புரதம் உடலுக்கு கிடைத்தால் அதில் 0.54 கிராம் புரதம் மட்டுமே உடலை சேர்ந்து கட்டுமான பணிகளுக்கு பயன்படும்
மீதம் 0.46 கிராம் புரதம் யுரியாவாக மாறி நைட்ரஜன் ஆகி கிட்னியால் வெளியேற்ரபடும். கிட்னிக்கு இது கூடுதல் சுமையாவதால் கிட்னி பழுதடைகிறது. எத்தனைக்கு எத்தனை தாவர புரதம் அதிகமாக சாப்பிடுகிறோமோ (உதா: பீன்ஸ், பருப்பு, சோயா) அத்தனைகத்தனை கிட்னியில் யுரியா அளவுகள் அதிகரிக்கும்
ஆரோக்கியமான கிட்னிக்கு இது பிரச்சனையே இல்லை. ஆனால் கிட்னி வியாதி உள்ளவர்களுக்கு, டயாலசிஸ் வரை போனவர்களுக்கு இது பிரச்சனையே
புரதத்திலேயே சிறப்பான தரமுள்ள புரதம் முட்டை புரதமே. ஒரு முட்டையை உண்டால் அதில் கிட்டத்தட்ட 100% அமினோ அமிலமும் உடலை சென்று சேர்கிறது. ஒரே ஒரு கிராம் அளவு கூட இதனால் யுரிவாவோ, நைட்ரஜனோ கிட்னியில் சேர்வதில்லை (அதுக்குன்னு 200, 300 கிராம் ப்ரோட்டின் சாப்பிட கூடாது
நைட்ரஜன் பேலன்ஸ், ப்ரோட்டின் பயோ அவைலபிளிட்டி ஆகிய அனைத்து விகிதங்களிலும் முட்டை, இறைச்சி ஆகிய புரதங்களே முன்னே நிற்கின்றன. இதில் உள்ள புரதங்களில் 99%, 100% அளவு உடலில் சேர்ந்துவிடுகிறது. தாவர புரதங்கள், பீன்ஸ், அரிசி, பருப்பு ஆகியவற்றின் 50, 60 சதவிக்த புரதமே உடலில் சேர்கிறது. 40, 50% வீண் தான் ஆகிறது..அதுவும் கிட்னியில் யுரியா நைட்ரஜன் ஆக
ஆக கிட்னி வியாதி இருப்பவர்கள் ப்ரோட்டினே சாப்பிடகூடாது என கூறினால் அதில் எப்பயனும் இல்லை. என்ன கடுமையான கிட்னி பழுது இருந்தாலும் அவர்களுக்கு குறைந்தது 40 கிராம் புரதமாவது தேவை. இல்லையெனில் அதுவே மரணத்தை தேடிகொடுத்துவிடும்
அந்த 40 கிராம் புரதமும் முட்டை, இறைச்சி போன்ற உணவுகலில் இருந்து வருவது கிட்னியின் சுமையை பெருமளவு குறைக்கும். அதனால் கிட்னிக்கு ப்ரோட்டின் ஆபத்து என கூறூவது உண்மையே. ஆனால் அது எப்புரதம் என்பதில் தான் விசயமே இருக்கு

)
0 comments:
Post a Comment