பேலியோ பால் திரட்டு
செய்முறை:
* ஒரு லிட்டர் பால் திரட்டு கிடைக்க சுமார் ஆறு லிட்டர் பால் வாங்கிக்கொள்ளவும். செய்யும் முறை சிம்பிள் என்றாலும் பாலுக்கு எருமையும் திரட்டுக்கு பொறுமையும் நேரமும் தேவை. குக்கர் அல்லது தடிமனான கடாய் போல நல்ல கனமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும், அதில் பாலை நிரப்பி நல்ல சாலிட் பதம் வரும் வரை தேவுடு காக்கவும். பால் பொங்கி வரவும் அடி பிடித்து கொள்ளவும் அபாயம் இருப்பதால் மிகுந்த கவனத்தோடு அவ்வப்போது கரண்டி வைத்து கலக்கிக்கொண்டே இருக்கவும்.
* இந்த இனிப்பை நல்ல முறையில் முடித்து துணைவியுடன் தின்ப நிகழ்வு ஆவதும் அல்லது துன்ப நிகழ்வு ஆவதும் உங்கள் கையில், எனவே கரண்டியை வைத்து பாத்திரத்தில் சுரண்டிக்கொண்டே இருக்கவும்.
* நேரத்தை சேமிக்க பாலை இரு பாத்திரங்களில் செய்தால் விரைவாக முடிக்கலாம். இதை செய்ய எனக்கு மூன்று மணி நேரம் பிடித்தது, சுவையும் பிடித்தது,அடி மட்டும் பிடிக்கவில்லை. பாலுக்கு பிறக்கும் போதே சுகர் இருப்பதால் மேலும் போடத்தேவையில்லை.
* இதில் சிக்ஸ் லிட்டர் பால் சிங்கிள் லிட்டர் ஆவதால் கலோரி அதிகம், பல-வாய் தின்னாமல் அளவாய் சாப்பிடவும்.பொறுமை இல்லாதவர்கள் கடையில் கண்டெண்ஸ்டு மில்க் வாங்கி குடிக்கலாமா என்று கமெண்டில் கமற வேண்டாம்.எல்லாம் வல்ல பேலியோ பெருமான்கள் பாலையும், பன்னீரையும் பேலியோ அலவ்ட் லிஸ்டில் சேர்த்த மாதிரி இதையும் எப்போதாவது சேர்த்துக்கொல்ல சீ…சேர்த்துக்கொள்ள அருள் புரிய வேண்டும்.
அனைவருக்கும் திரட்டுப்பால் கொடுக்க முடியாததால், அன்-பால் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இந்த சுவையான, பாரம்பரிய பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Vasan Bangalore " அவர்களுக்கு நன்றி.



0 comments:
Post a Comment