பேலியோ சூப். 
தேவையான பொருட்கள்:
குடைமிளகாய்
காலிப்ளவர் சுடுநீரில் சுத்தம் செய்தது
ப்ரோகலி
காளான்
பன்னீர் தலா 1கப் நறுக்கி
பெரிய வெங்காயம் -1 நறுக்கியது
ஆப்பிள் தக்காளி -1 நறுக்கியது
பூண்டு -10 பல்
தேங்காய்ப்பால் -1 கப்
வெண்ணெய். -2மேசைகரண்டி
பட்டை -1 அங்குல துண்டு
கொத்தமல்லிதழை -சிறிதளவு
உப்பு, மிளகுதூள் -தேவைக்கேற்ப.
செய்முறை:
குக்கரில் வெண்ணெய் போட்டு காய்ந்தவுடன் பட்டை,பூண்டு சேர்த்து வதக்கி பின்பு வெங்காயம்,தக்காளி மற்றும் அனைத்து காய்களையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.பின்பு 1/2 கப் தண்ணீர் ,சிறிது உப்பு சேர்த்து குக்கரை மூடி 2விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.உடனடியாக ப்ரசரை எடுத்து விடவும்.பின்பு தேங்காய்ப்பால், சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கொதி வந்த பின்பு கொத்தமல்லிதழை தூவி இறக்கி பரிமாறவும். (இதேமுறையில் சௌசௌ,பீர்க்கங்காய், சுரைக்காய் போட்டும் செய்யலாம்)
0 comments:
Post a Comment