பீர்க்கங்காய் பரங்கிக்காய் puree curry 
ரெசிப்பி :
வாணலியில் பட்டர் கொஞ்சம் சேர்த்து சூடானதும், ஒரு பூண்டு, ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி, 100 ஜிம் பரங்கிகாய் வித் ஸ்கின் , 4 துண்டு தேங்காய் , ஒரு மிளகாய் வற்றல் எல்லாம் சேர்த்து காய் அரை பதம் வேகும் வரை நன்றாக வதக்கவும்..
இறுதியில் சிறிது கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து ஆறியதும் கூழ் போல் அரைக்கவும்.
ஒரு வாணலியில் பட்டர் சேர்த்து சூடானதும் கடுகு சீரகம் பெருங்காயத்தூள் , நறுக்கிய வெங்காயம் சிறுது , பீர்க்கங்காய் 250gm, சேர்த்து வதக்கி தண்ணீர் தெளித்து வேக விடவும், பாதி வெந்ததும், 1 ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் மல்லி தூள் , உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி , அரைத்த மசாலாவும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து கெட்டியானதும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

0 comments:
Post a Comment