கர்நாடகா ஸ்பெஷல் முறுக்கு 
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 3 கப்
கடலை மாவு - 1/2 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
மிளகாய் தூள் - 1/4 கப்
மிளகு - 4-5
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் துருவிய தேங்காய், சீரகம், மிளகு, பெருங்காயத் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அரைத்ததை பாத்திரத்தில் உள்ள மாவுடன் சேர்த்து, சிறிது உப்பு தூவி, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி மென்மையாக பிசைந்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த மாவை கொஞ்சமாக எடுத்து, திரி போல் திரித்து, பின் முறுக்கு போன்று சுற்றிக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கர்நாடகா ஸ்பெஷல் முறுக்கு ரெடி!!!

0 comments:
Post a Comment