இறால் வறுவல்
இறால் மீன் 250 கிராம்
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
சீரகத்தூள் 1 ஸ்பூன்
கொத்தமல்லித்தூள் 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணை 3ஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
சீரகத்தூள் 1 ஸ்பூன்
கொத்தமல்லித்தூள் 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணை 3ஸ்பூன்
பொடிகளுடன் இஞ்சி பூண்டு விழுதையும் உப்பும் சேர்த்து கலக்கவும்.
இத்துடன் கழுவிய இறால் மீனை கொட்டி நன்றாகப் பிறட்டவும்.
குறந்தது 20 நிமிடம் ஊற விடவும்.
ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம்.
பின் வாணவிலியில் 2ஸ்பூன் எண்ணை விட்டு மசாலுடன் ஊற வைத்த மீனைக் கொட்டி பிறட்டி விட வேண்டும்
மிதமான தீயில் மூடி வைத்து வேக விடவும்.
நீர் ஊற்ற வேண்டாம்.
மீனிலிருந்து தானாக வெளியேறும் நீர் மீன் வேகப் போதுமானது.
5நிமிடம் கழித்து மீண்டும் பிறட்டி விடவும்.
மீன் இளஞ்சிவப்பாக நிறம் மாறியதும் தீயை நன்கு எறிய விட்டு நீர் முழுவதும் வற்றியதும் மீதமுள்ள 1 ஸ்பூன் எண்ணையை விட்டு 2 நிமிடம் கிளறி இறக்கவும்.
சுவை சும்மா அள்ளும்😼😼😼

0 comments:
Post a Comment