பன்னீர் மஞ்சூரியன்
தேவையான பொருட்கள்:
பனீர்-100g (cubes)
வெங்காயம் பெரியது-1
கேரட் துருவியது- 1 கையளவு
காப்சிகம் -1
கெட்டி தயிர்-50ml
செய்முறை:
ஸ்டார்ட் மியூசிக் :தயிர் கெட்டியாக இருப்பது அவசியம்.கெட்டி தயிர் கிடைகவில்லையெனில் ஒரு வெள்ளை துணி அல்லதுமஸ்லின் பேப்பர் மூலம் வடிகட்டி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இந்த தயிறுடன் மிளகாய் பொடி,கரம் மசாலா பொடி,உப்பு போட்டுநன்றாக மிக்ஸ் பண்ணவும்.பின் சின்ன சின்னதாய் கட் பண்ணின வெங்காயத்தில் பாதி,காப்சிகம்,கேரட் போட்டு மிக்ஸ் பண்ணி ஒருமணி நேரம் ஊற வைக்கவும்
பின் ஒரு தவாவில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு சீரகம் போட்டு தாளித்ததும் மீதியுள்ள வெங்காயத்தை போட்டு நல்ல வதக்கவும்.பின் பன்னீர் மிக்ஸ் அதில் போட்டு நன்றாக வேகவிடவும்.அவ்வப்போது கிளறி விடவும்.இப்போது சிறிது மஞ்சள் பொடி,கரம் மசாலாதூவி கிளறவும்.பன்னீர் வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். காரம் கொஞ்சம் ஜாஸ்தி போட்டால் மிகவும் நன்றாகஇருக்கும்.விருப்பபட்டால் சிறிது லெமன் பிழிந்து விடலாம்.
இந்த சுவையான,புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய "Thirumalai"அவர்களுக்கு நன்றி :)


0 comments:
Post a Comment