இறால் மசாலா
தேவையான பொருட்கள்:
இறால் - 300 gm
குடை மிளகாய் - பாதி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 4 பல்
கேரட் - 1
சில்லி பேஸ்ட் - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை
உப்பு
வெண்ணெய் - 1 tsp
செய்முறை:
* கடாயில் வெண்ணெய் சூடு செய்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* இதனுடன் பூண்டு, கறிவேப்பிலை, சில்லி பேஸ்ட், தக்காளி சேர்த்து 5 நிமிடங்கள் வேக விடவும்.
* பின்பு இறால், கேரட் சேர்த்து மேலும் 7 நிமிடங்கள் வேக விடவும்.
* ஈரப்பதம் இல்லாமல் வெந்த பிறகு கடைசியில் குடை மிளகாய் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான இறால் மசாலா ரெடி.
இந்த சுவையான, பாரம்பரிய பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Sathya Vani" அவர்களுக்கு நன்றி.


0 comments:
Post a Comment