Thursday, July 28, 2016

டயபடிக் மக்களுக்கான தனிக் குழுமம் பற்றிய விவரம். / Exclusive Paleo group for Diabetic

டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www.facebook.com/groups/ancestralfoods/ ) அட்மின்கள், மாடரேட்டர்கள் சார்பாக வரவேற்கிறோம். டயபட்டீஸை உங்கள் உடலில் இருந்து விரட்டி, உங்களை ஆரோக்கியமான வாழ்வியல் முறைக்கு அழைத்து செல்வதே குழுவின் நோக்கம். குழுவில் கோப்புகள் பகுதியில் மருத்துவர்கள், சீனியர்களின் அறிவுரைகள் நல்ல தமிழில் உள்ளது. உங்கள் உள்ளுறுப்புகளின் இன்ப்ளமேஷன் எனப்படும் உள்காயத்தை குறைத்து, உங்கள் குருதியில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க கீழ்க்கண்ட பரிந்துரைகள் கொடுக்கப்படுகிறது. என்ன என்ன உணவு சாப்பிடவேண்டும் என்பது ஆளுக்காள் மாறுபடும் (அதற்கு தைரோகேர் ஆரோக்கியம் 1.4 பேக்கேஜ் எடுத்து அந்த ரிப்போட் அப்லோட் செய்து நீங்கள் டயட் கேட்கவேண்டும்), ஆனால் சில பரிந்துரைகள் அனைவருக்குமானது. அவற்றை கீழே பட்டியலிடுகிறேன்.

சிவராம் அண்ணாவின் உன்னை வெல்வேன் நீரிழிவே புத்தகம் கண்டிப்பாக முழுமையாக படித்திருக்கவேண்டும். செல்வன் ஜி யின் பேலியோ டயட் புத்தகம் படித்திருக்கவேண்டும். மல்லிகை மகள் புத்தகத்தில் நமது குழு சீனியர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு புத்தகம் படித்திருக்கவேண்டும்.

குழுவில் ரிப்போட் அப்டேட் செய்தபின், சீனியர்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்காக காத்திருந்து, டயட் பெற்று அதன் பின்னர் மட்டுமே பேலியோ தொடங்க வேண்டும். (உதா : யூரிக் ஆசிட் அளவுகள் அதிகம் இருந்தால், ரெட் மீட், கீரைகள் தவிர்க்க சொல்வோம். ஆனால் நீங்களாக டயட் ஆரம்பித்தால் இதை கணக்கில் கொள்ளாமல் ரெட் மீட் சாப்பிட்டு யூரிக் ஆசிட் அளவுகள் மேலும் அதிகரித்து பிறகு எங்களை குறை சொல்வீர்கள்)

தினமும் வைட்டமின் டி: வைட்டமின் டி புரோட்டகாலை பாலோ செய்யவேண்டும். அதாவது சப்ளிமெண்ட்ஸ் எடுக்கவேண்டும். (உங்கள் வைட்டமின் டி அளவுகள் அடுத்த ரிப்போட்டில் சிறப்பாக வரும் வரை. வைட்டமின் டி அளவுகள் 100 இருந்தால் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம். ஆனால் நான் பார்க்கும் ரிப்போட்டுகளில் பலவற்றில் வைட்டமின் டி 25க்கு குறைவே. சிலருக்கு 10க்கும் குறைவு. 6 கூட பார்த்தேன். அதிக வெய்யில் இருக்கும் நம் நாட்டில் இந்த நிலை என்பது தான் மிகவும் ஆச்சர்யம். ஆக தினமும் மதிய வெய்யிலில் நின்று, அடுத்த ரிப்போட்டில் உங்கள் வைட்டமின் டி அளவு மிக அதிகரிக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். மதிய வெய்யிலில் (11:30 யில் இருந்து 2 மணி வரை) ஏதாவது ஒரு 20 நிமிடம், தண்ணீர் வைத்துக்கொள்ளவும். அவ்வப்போது தண்ணீர் குடித்துக்கொள்ளவும்.

தினமும் வெய்யிலில் 20 நிமிடம்.
+
சாப்ட்ஜெல்ஸ் டாக்டர்ஸ் பெஸ்ட் வைட்டமின் டி3 - 5000 ஐயு - காலை உணவுக்கு பின் 1 மாத்திரை
வைட்டமின் கே2 - ஜாரோ - காலை உணவுக்கு பின் 1 மாத்திரை (ஜாரோ பார்முலாஸ் எம்.கே7) வைட்டமின் கே2 90 எம்சிஜி
மக்னீசியம் க்ளைசினேட் - சொலாரே - ஒரு மாத்திரை இரவு உணவுக்கு முன்.

தினம் ஒரு ஒமேகா 3 - எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். வெஜிட்டேரியன்கள் கண்டிப்பாக தயங்க கூடாது. 1000 எம் ஜி. டயபட்டீஸ் மக்களுக்கு மிக மிக தேவையானது. நார்வீஜியன் காட் லிவர் ஆயில் என கேட்டு பார்த்து அந்த பிராண்ட் வாங்கவும். எது பெஸ்ட் என விசாரித்து வாங்கவும்.

வைட்டமின் பி 12 குறைபாட்டை போக்க அசைவம் சாப்பிடுபவர்கள் வாரம் ஒருமுறை ஈரல் + ரத்த பொரியல் கண்டிப்பாக சாப்பிடவேண்டும்.

கட்டுப்பாடற்ற சுகர் இருப்பவர்கள் (300க்கு மேல் / 11க்கு மேல்) கண்டிப்பாக வாரத்தில் ஐந்து நாட்கள் 4 கிலோமீட்டர் நடைப்பயிற்சி செய்யவேண்டும். நல்ல கட்டுப்பாட்டில் இருப்பவர்கள், வாரத்தில் 3 நாட்கள் 4 கிலோமீட்டர் நடைப்பயிற்சி செய்யவேண்டும். நடைப்பயிற்சி சீரான ரத்த ஓட்டத்தை கொடுத்து நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். நமது குழுவின் வாக்கிங் ஈவண்டில் சேர்ந்து உங்கள் நடைப்பயிற்சி விவரங்களை தெரிவித்துவாருங்கள் :

பசு மஞ்சள் வைத்தியம் : கொழுப்புணவு சாப்பிட்ட பின், பசு மஞ்சள் வைத்தியம் செய்யவும். ஆர்கானிக் மஞ்சள் பொடி 1 ஸ்பூன் + துளசி இலை 3 + மிளகு தட்டியது 8 + ஒரு சின்ன வெங்காயம் சிறிய துண்டுகளாக வெட்டியது இவற்றை மாத்திரை போல விழுங்கவும், அல்லது கடித்தும் சாப்பிடலாம்.

பூண்டு : தினமும் காலையில் இரண்டு பூண்டுகளை சிறு துண்டுகளாக வெட்டி, பத்து நிமிடம் கழித்து தண்ணீரில் அப்படியே விழுங்கவும்.

லெமன் ஜூஸ் : தினமும் ரெண்டு எலுமிச்சையை ஒரு பெரிய க்ளாஸில் பிழிந்து ஒரு ஸ்பூன் உப்பு போட்டு குடிக்கவும். ஒரே நேரமாக குடிக்க முடியவில்லை என்றால் லெமன் ஜூஸ் வாட்டர் பாட்டில் தயாரித்துக்கொண்டு தாகம் வரும்போதெல்லாம் இதையே குடிக்கவும். பேராதிமனிதனான நம் குழுவின் தலைவர் செல்வன் தினம் 4 லெமன் ஜூஸ் குடிக்கிறார். விருப்பம் இருந்தால் நீங்களும் செய்யலாம்.

ஆப்பிள் சைடர் வினிகர் : உங்கள் குருதியில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பை 20 சதவீதம் வரை கட்டுப்படுத்தக்கூடியது ஆப்பிள் சைடர் வினிகர். ஒரு கிளாஸில் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் விட்டு, அதில் முழுவதும் தண்ணீர் நிரப்பி, பத்து நிமிடம் வைத்திருந்து உணவுக்கு பின் ஒவ்வொரு வேளையும் அருந்தலாம். ப்ராக் ப்ராண்ட் ரா அண்பில்ட்டர்ட் ஆப்பிள் சைடர் வினிகர் மட்டுமே அருந்தவேண்டும். நார்மல் வினிகர், நார்மர் ஆப்பிள் சைடர் வினிகர் அருந்த கூடாது. இது அந்த நிறுவனத்தின் இணைய தளம் - bragg.com. அனைத்து இ-காம் இணைய தளங்களிலும் ஆப்பிள் சைடர் வினிகர் கிடைக்கிறது. ஆப்பிள் சைடர் வினிகர் எப்படி அருந்துவது என்ற யூடியூப் வீடியோ இது : https://www.youtube.com/watch?v=SmQRpL97ltE

நாட்டு மருந்துகள், நிலவேம்பு பொடி பவுடர் தூள் குச்சி மரம் ஓமியோபதி மருந்துகள் சித்தா யுனானி மருந்துகள் எனக்கு எந்த பலனையும் தரவில்லை. இது என் சொந்த அனுபவம். மேற்கொண்டு இதில் எதுவும் பேசுவதாயில்லை.

டயபட்டீஸ் இருக்கும் பலரிடம் குருதியில் ரத்த சர்க்கரை அளவை அளக்கும் கருவி கிடையாது. நீங்கள் குடும்பமாக சினிமாவுக்கு போகும் செலவு தான் அந்த மெஷின். அக்யூ செக் என்ற பிராண்ட் நன்றாக இருக்கிறது. பேலியோ ஆரம்பித்தப்பின் வாரம் 3 முறையாவது உணவுக்கு முன் ஒரு முறையும், உணவுக்கு பின் இரண்டு மணி நேரம் கழித்து ஒரு முறையும் குருதி பரிசோதனை செய்து பார்த்துவரவும். காலை உணவுக்கு முன் 110க்கு கீழேயும், உணவுக்கு பின் 180க்கு கீழேயும் இருக்கவேண்டும்.

டயபட்டீஸுக்கு இதுவரை எந்த மாத்திரையும் எடுக்காமல் இருப்பவர்கள் தயவு செய்து உங்கள் ரிப்போட்டை ஆங்கில மருத்துவர் - டாக்டர் எம்பிபிஎஸ்ஸிடம் காட்டி டயபட்டீஸுக்கு கொடுக்கப்படும் மருந்துகளை வாங்கி தவறாமல் உண்ணவும். ஒரு மாதம் பேலியோ எடுத்தபிறகு மீண்டும் ஒரு ரிப்போர்ட் எடுத்து, அதே மருத்துவரிடம் காட்டி மாத்திரை அளவுகள் குறைப்பதோ அல்லது முற்றிலும் நிறுத்துவதோ செய்யலாம்.

டயபட்டீஸுக்கு மாத்திரை எடுப்பவர்கள் உங்கள் மாத்திரைகளை நீங்களாக நிறுத்தவேண்டாம். பேலியோ பாலோ செய்து அதன் பின் குருதி பரிசோதனை செய்து மருத்துவரின் அனுமதி பெற்று அதன் பின்னரே மாத்திரைகளை நிறுத்தவேண்டும்.

நான் அப்படித்தான் செய்தேன். மருத்துவர் மெட்பார்மினை நிறுத்தி முழுவதும் டயட் பாலோ செய் என அனுமதி கொடுத்தார். அவர் அனுமதியோடு பேலியோவை கடைபிடித்து குருதி சர்க்கரை அளவுகளை குறைத்து காட்டினேன். நீங்களும் அவ்வாறே செய்க

பெண்கள் கண்டிப்பாக இரும்பு சட்டியில் சமைத்து உண்டால் உங்கள் இரும்பு சத்து குறைபாடு நீங்கும். பெரும்பாலான டயபட்டீக் இருக்கும் பெண்களுக்கு இரும்பு சத்து குறைபாடு கண்டிப்பாக இருக்கிறது என்பதை பல ரிப்போட்களில் பார்க்கிறேன்.

கிழங்கு வகைகள் தவிர்த்துவிடவும். டயபட்டீஸ் முழுதாக குறைந்தபிறகு எடை இழப்பை நிறுத்த தினம் ஒரு உருளைக்கிழங்கு எடுக்கலாம்.

சர்க்கரை வியாதி / நீரிழிவு குறைபாடு உள்ளவர்கள் பால் பொருட்கள் முடிந்த அளவு தவிர்த்துவிடவேண்டும்.

பாத பராமரிப்பு : இரவில் ஈமு ஆயில் போட்டு பாதங்களை மசாஜ் செய்யலாம். பாதங்களில் ஆறாத புண் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவேண்டும்.

ps:

உங்கள் தைரோகேர் ரிப்போட் குழுவில் இமேஜ் ஆக கொடுக்கலாம். அல்லது உங்கள் மின்னஞ்சலுக்கு வரும் பிடிஎப் கோப்பை அப்படியே அப்லோட் செய்யலாம். தயவு செய்து காத்திருந்து முறையான டயட் பெறவும்.

Credits: Dr.V.Hariharan MBBS, MD. Dr Raja Ekambaram​ Dr Vijayapriya Panneerselvam​ Sivaram Jagadeesan

Link to buy Paleo Books : http://paleo.co.in (you can also buy various products displayed in our meetup events - People want to add their products, do let me know)

0 comments:

Post a Comment

Like Us Facebook

Categories

Unordered List

Sample Text

Blog Archive

Subscribe Via Email

Sign up for our newsletter, and well send you news and tutorials on web design, coding, business, and more! You'll also receive these great gifts:

Blog Archive

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Social Icons

Pages

BTemplates.com

Popular Posts

Popular Posts

Slider[Style1]

Find Us On Facebook

About us

Video Of Day

Popular Posts

Recent Posts

Text Widget