Saturday, July 30, 2016

காலிபிளவர் மலாய் கபாப்





தேவையான பொருட்கள்:

காலிபிளவர் 1 நடுத்தரளவு

பாகம் 1
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் 1/2 டீஸ்பூன்

பாகம் 2
ப்ரெஷ் க்ரீம் 1/4 கப்
தயிர் 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் கொத்தமல்லிதழை விழுது 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவைக்கு

செய்முறை:
*காலிபிளவரை நடுத்தர பூக்களாக எடுத்து உப்பு கலந்த வெந்நீரில் 10 நிமிடங்கள் போட்டு நீரை வடிக்கவும்.
*பாகம் 1 ல் கொடுத்துள்ள பொருட்களை காலிபிளவரை கலந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*பின் பாகம் 2ல் கொடுத்துள்ள பொருட்களை அதனுடன் கலந்து மேலும் 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*முற்சூடு செய்த அவனில் 210°C ல் 15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
பி.கு

குறிப்பு: இதே போல் சிக்கன் மற்றும் பனீரில் செய்யலாம்.

இந்த சுவையான, புதுமையான பேலியோ  சமையல் குறிப்பினை வழங்கிய "Menaga Sathia" அவர்களுக்கு நன்றி. 

காரகறி காடை மசாலா/Beef red curry with quail eggs










தேவையான பொருட்கள்:
சிறிதாக நறுக்கிய மாமிசம்
பச்சை மிளகாய்
இஞ்சி பூண்டு paste
தக்காளி paste
வெங்காயம்
மிளகாய் பொடி
Pepper Pwdr
மஞ்சள் தூள்
கரம் மசாலா
உப்பு
நெய்
வேகவைத்த காடை முட்டை

செய்முறை:
* நெய்யில் வெங்காயம், இபூ paste இரண்டையும் வதக்கவும்
* மசாலா powders சேர்த்து வதக்கவும்
* தக்காளி paste, மாமிசம் சேர்த்து சுருள வேகவிடவும்.
* இறக்கும் முன் பச்சை மிளகாய் மற்றும் காடை முட்டைகளை பிரட்டி இறக்கவும்.

இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Nithi" அவர்களுக்கு நன்றி. 

பேக்ட் காலிஃப்ளவர்:




தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் துண்டுகள் – 3 கப்
ஆலிவ் ஆயில் – 1 +1 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 1
தட்டிய பூண்டு பற்கள் - 6
மிளகுத்தூள் –1 - 2 டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் – 1 டேபிள்ஸ்பூன்
மொசரல்லா அல்லது செடார் சீஸ் – 1/2 -1 கப் ( விருப்பமான அளவு)
விருப்பமான ஹெர்ப்ஸ் ( சீஸ் மேல் தூவ)
உப்பு – தேவைக்கு.


செய்முறை:
* நறுக்கிய காலிஃப்ளவர் துண்டுகளை கொதிக்கும் நீரில் போட்டு மூடி விடவும். அடுப்பை அணைக்கவும். 2 நிமிடம் கழித்து தண்ணீர் வடித்து வைக்கவும்.
* இதனை ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சூடு செய்து, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பூண்டு பற்கள் சேர்த்து வதக்கி காளிஃப்ளவர் சேர்த்து சிறிது பிரட்டி உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.
* ஓவனை முற்சூடு செய்யவும். ஒரு ஓவன் சேஃப் பவுலில் ஆலிவ் எண்ணெயை தடவவும். அதில் வதக்கிய காளிஃப்ளவரை வைக்கவும். துருவிய சீஸ் மேலே தூவவும்.
விரும்பினால் மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ் மேலே தூவி மீடியம் வெப்பநிலையில் பேக் செய்து எடுக்கவும். மேலே தூவிய சீஸ் உருகி லேசாக சிவற ஆரம்பிக்கும் பொழுது ஓவனை அணைக்கவும்.


இந்த சுவையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Asiya Omar " அவர்களுக்கு நன்றி. 

ப்ரோபயாடிக் எலுமிச்சை ஊறுகாய்




20 பெரிய எலுமிச்சம்பழங்களை எடுத்துகொள்ளவும். 12 பழங்களை நன்றாக துண்டாக நறுக்கி ஜாடியில் இடவும். மீதமுள்ள பழங்களைப்பிழிந்து அந்த ஜூஸை ஜாடியில் ஊற்றி, தோலை அதே ஜாடியில் இடவும். பலரும் எலுமிச்சை ஜூஸுக்கு பதில் வினிகரை ஊற்றுவார்கள் எனினும் எலுமிச்சை ஜூஸே வினிகரை விட சிறப்பு வாய்ந்தது. கனி இருக்க காய்கவர்வதேன்?
இதன்பின் 150 கிராம் உப்பை ஜாடியில் போட்டு நன்றாகக்கலக்கவும். இதில் மிளகாய்ப்பொடி, மஞ்சள் சேர்த்தால் ஊறுகாய், அது ஆப்ஷனலே. அதனால் காரத்தின் அளவுக்கு ஏற்ப மஞ்சளும், மிளகாய்ப்பொடியும் சேர்க்கவும். பாரம்பரிய ஊறுகாயில் இதன் மேல் கொதிக்கும் நல்லெண்னயை ஊற்றுவார்கள், அல்லது நல்ல வெயிலில் 10 நாள் காயவிட்டு ப்ரொபயாடிக் பாக்ட்ரியாக்களைக்கொன்றுவிடுவார்கள். நாம் அத்தவறை எல்லாம் செய்யவேண்டியதில்லை. மிளகாய்ப்பொடியும், மஞ்சளும் சேர்த்து நன்றாக கலக்கி அப்படியே பாத்திரத்தை ப்ரிட்ஜில் வைத்துவிடவேண்டியதுதான்
இனிநாள்பட, நாள்பட அதில் ப்ரொபயாடிக் பேக்ட்ரியா காலனி உருவாகிக்கொண்டே வரும். அதை உண்ண உங்கள் பெரும்குடல் பலம் பெறும். ஆனால் வெறும் வயிற்றில் உண்னவேண்டாம். உனவுடன் உட்கொள்ளுங்கள்
வீட்டில் செய்த ப்ரொபயாடிக் எலுமிச்சை ஊறுகாய்.

குறிப்பு: ப்ரோபயாடிக் ஊறுகாய்
ப்ரோபயாடிக் என்றால் என்னன்னு பார்த்தால் ஒரு உனவுப்பொருளை பெர்மெண்ட் செய்தால் அதில் நலமளிக்கும் பாக்டிரியாக்கள் உருவாகும். உதாரணமாக ப்ரொபயாடிக் கபிர் தயிரில் அத்தயிரை ஜீரணிக்கும் சக்தியுள்ள பாக்டிரியா காலனிகள் உருவாகின்றன. அதை உண்டால் அவை நம் வயிற்றுக்குள் சென்று அங்கே வாழ்கின்றன. இதன்பின் நாம் உண்ணும் உணவில் ஜீரணிக்க முடியாத பகுதிகள் பெரும்குடலுக்குச்செல்கின்றன. உதாரணமாக நார்ச்சத்து. இதை இந்த பாக்டிரியாக்கள் உன்டு ஜீரணம் செய்து நம் மலம், கழிவுகள் முதலானவற்றை சிக்கலின்றி வெளிவரச்செய்கின்றன. பெரும்குடல் என்பது மனிதனின் இரண்டாம் மூளை. அதில் உள்ள பாக்டிரியாக்களின் நலனே நம் நலன். இந்த பாக்டிரியாக்களுக்கு உணவின்றி அழிந்தால் நம் பெரும்குடல் சரிவர இயங்காது. நாமும், இத்தகைய ப்ரோபயாடிக் பாக்டிரியாக்களும் இப்படி ஒரு விந்தையான பரிணாம உறவுடன் உள்ளோம்.
உணவில் ப்ரொபயாடிக் பாக்டிரியாவை உண்டாக்க கெபிர் தயிரை உண்னவேண்டும் என்பது நமக்கு தெரியும். ஆனால் அதுபோக இயற்கையில் பெர்மெண்ட் செய்த எந்த உனவுப்பொருளிலும் ப்ரோபயாடிக் பாக்ட்ரியாக்கள் உருவாகும். அவையாவன
கொரிய கிம்சி,
ஜப்பானியா நாட்டோ
ஜெர்மானிய சவர்க்ராட் முதலானவை
பெர்மென்டேஷன் என்பது உப்பு அல்லது வினிகர் மூலம் ஒரு உனவுப்பொருளை நாள்படப்பாதுகாத்து, அதை பாக்டிரியா, ஈஸ்ட் மூலம் முறித்து அதில் கெமிக்கல் மாற்றத்தை உருவாக்குவதே. ஒயின், ரொட்டி எல்லாம் பெர்மெண்டேஷன் மூலம் தான் தயாராகின்றன. ஆனால் உயர்வெப்பத்தில் சூடாக்குவதால் ரொட்டியில் ப்ரோபயாடிக் பாக்டிரியா உருவாவதில்லை. ஒயினை சூடாக்குவதில்லை எனினும் அதில் உருவாகும் ஆல்கஹால் பாக்டிரியாக்கலை அழித்துவிடுகிறது. காரணம் ஆல்கஹால் ஒரு சிறந்த கிருமிநாசினி smile emoticon
ஆக நம் வயிற்றில் ப்ரொபயாடிக் பாக்டிரியா செழித்து வளர நாம் கெபிர் தயிர், கிம்சி, நாட்டோ, சவர்க்ராட் சாப்பிடணும் என சொன்னால் நம் ஊரில் நம்மை அடிக்க வருவார்கள் smile emoticon இதெல்லாம் எந்த நாட்டு உணவு? தமிழ்நாட்டுக்கு என்ன வழி? தமிழ்நாட்டு உணவில் ப்ரொபயாடிக் பாக்டிரியா இல்லையா?
இருக்கு..ஆனால் இல்லை..டென்சனாகவேண்டாம் smile emoticon அதாவது நம் ஊர் ஊறுகாய் தான் கிம்சி, சவர்க்ராட் எல்லாம். ஆனால் ஊறுகாய்க்கும் இதுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் ஊறுகாயை உயர்வெப்பத்தில் எண்னெயில் வணக்குகையில் அதில் ப்ரொபயாடிக் பாக்ட்ரியா உருவாவதில்லை. ஆக ஊறுகாயை வெப்பமின்றி செய்தால் அதில் ப்ரொபயாடிக் பாக்ட்ரியாக்கள் உருவாகும். நாம் அதன்பின் கெபிர் தயிர் எங்கே கிடைக்கும், நாட்டோ எங்கே கிடைக்கும் என அலையவேண்டியதில்லை - Neander Selvan

இந்த ஆரோக்கியமான உணவின் செய்முறை குறிப்பினை வழங்கிய "Neander Selvan" அவர்களுக்கு நன்றி :)

மசாலா முட்டை பன்னீர் புர்ஜி



முட்டை புர்ஜி , பன்னீர் புர்ஜி தனியாக செய்து அலுத்துவிட்டது ..இன்று இரண்டையும் ஒன்றாக செய்தேன் 

தேவையான பொருட்கள்:

ஒரு வெங்காயம் பொடியாக நறுக்கியது , பச்சை மிளகாய்  நான்கு பொடியாக , சோம்பு , வெண்ணெய் நூறு கிராம்  , உப்பு , பன்னீர்இருநூறு கிராம்  துருவியது  , முட்டை நான்கு உடைத்து அடித்துவைக்கவும் ., மசாலா தூள் ஒரு ஸ்பூன் மிளகாய்  தூள்  ஒரு ஸ்பூன் ,கொத்தமல்லி தழை 

செய்முறை:
* ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு அது உருகியவுடன் சோம்பு அதில் போடவேண்டும் ..உடனே வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி பன்னீர் மற்றும் முட்டைக்கு அளவாக உப்புமசாலா தூள்மிளகாய் தூள்   சேர்த்து பின் அதில்துருவிய பன்னீர் சேர்த்து நன்றாக வதக்கி பின் உடைத்த முட்டையையும் சேர்த்து வதக்கி மேலே கொத்தமல்லி சேர்த்து சாப்பிடவும்.

இந்த புதிய சமையல் குறிப்பினை வழங்கிய அம்மா "Dolly Bala" அவர்களுக்கு நன்றி :)

கேரளா முட்டை ரோஸ்ட்



தேவையான பொருட்கள்:
வேகவைத்த முட்டை - 4
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 3
நீளவாக்கில் நறுக்கிய  தக்காளி - 1
நீளவாக்கில் இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - கொஞ்சம்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
* ஒரு கடாயில்  தேங்காய் எண்ணெய்  காயவைத்து கடுகு தூவவும். கடுகு பொரிந்ததும் வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து, வெங்காயம் சுருளும் வரை வதக்கவும்.
* வெங்காயம் நன்கு சுருண்டு வதங்கிய பின் கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* இப்பொழுது மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,மிளகுத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* நறுக்கிய தக்காளியை இத்துடன் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
* வேகவைத்து,தோலுறித்த முட்டையை நான்கு புறம் கீறி, இந்த மசாலாவுடன் சேர்த்து நன்கு பிரட்டவும்.
* சுவையான, காரமான கேரளா முட்டை ரோஸ்ட் ரெடி.

பேலியோ பிரட்




தேவையான பொருட்கள்:
பாதாம் மாவு - 1 கப்
தேங்காய் மாவு - 1 டீஸ்பூன்
பேக்கிங் பொடி  - 1 டீஸ்பூன்
தேங்காய் / ஆலிவ் எண்ணெய் - 1/2 கப்
முட்டை - 2
உப்பு - மிகவும் சிறிதளவு

செய்முறை:

* முட்டையை நன்கு அடித்துக்கொள்ளவும், பின்பு அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்கி, சூடாக இருக்கும் ஓவனில் (350 degree fahrenheit) வைத்து 30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

தண்டுக்கீரை பொரியல்



தேவையான அளவு கீரையை நன்கு சுத்தம் செய்து  பொடியாக நறுக்கிக் கொள்ளவும்வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு,சீரகம்ஒரு மிளகாய்கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்அதோடு  அரிந்த வெங்காயம் மற்றும் பூண்டு பல்  சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கியதும் அரிந்த கீரையை போட்டு உப்புமஞ்சள் தூள் சேர்க்கவும்கீரை வதங்கியதும் வாணலியை அடுப்பில்இருந்து இறக்கி கீரையோடு தேங்காய் துருவல் சேர்த்து உண்ணலாம்.

இந்த சமையல் குறிப்பினை வழங்கிய "Shanthi pettai" அவர்களுக்கு நன்றி :)

காலி பிளவர் - முட்டை பொரியல்





காலி பிளவரை சிறு சிறு துண்டுகளாக்கி சுடு தண்ணீரில் மஞ்சள் உப்பு கலந்து 5 நிமிடம் வைக்கவும்பிறகு காரட் துருவியில்துருவிக்கொள்ளவும்வழக்கம்போல் முட்டை பொரியல் செய்யும் முறையில்வெங்காயம் தக்காளியுடன்துருவிய காலி பிளவரைசேர்த்து வதக்கவும்.. உப்புமிளகுத்தூள் , சேர்க்கவும்நன்றாக வதங்கியதும் , முட்டைகளை உடைத்து ஊற்றவும் .. முட்டை நன்றாகவறுத்ததும்சிறிது மஞ்சள் தூள் தூவி கிளறிவிடவும்சுவையான காலி பிளவர் - முட்டை பொரியல் தயார். ( நான் பூண்டுகொத்தமல்லி சேர்த்தேன்விருப்பம் உள்ளவர்கள் சேர்த்துக்கொள்ளவும் ) .. முதல் முறை செய்தேன்நன்றாக இருந்தது.

காலி பிளவர் - முட்டை பொரியல் - இந்த சுவையான, புதிய முறையில் சமையல் குறிப்பினை வழங்கிய "Gnana Vadivel S" அவர்களுக்கு நன்றி :)

காலிஃபிளவர் உப்புமா





பாதி காலிஃபிளவர பொடியா நறுக்கி மிக்சியிலோ () food processorலையோ போட்டு துருவின மாதிரி பண்ணிக்கணும்ரெண்டுஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு.பருப்புசீரகம் போட்டு தாளிக்கணும்பொடியா நறுக்கின சிவப்பு வெங்காயம்+பச்சை மிளகாய்வதக்கணும்வதங்கின பிறகு காலிஃபிளவர போட்டு அது வேகுற வரைக்கும் வதக்கணும்எறக்குறதுக்கு முன்னாடிமஞ்சள்தூள்,கருவேப்பிலைதுருவின இஞ்சிஉப்பு போட்டு கிளறினா போதும்.

காலிஃபிளவர் உப்புமா - இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Swarnalatha Kuppa"அவர்களுக்கு நன்றி :)

வெங்காயத்தாள் தொடுகறி

தேவையான பொருட்கள்: 
முற்றிய வெங்காயத்தாள்
வறுத்த நிலக்கடலை (பேலியோ அல்ல )
மஞ்சள் தூள்
உப்பு

வறுத்து பொடிக்க:
வரமிளகாய்
தனியா
சீரகம்
மிளகு

செய்முறை:

முற்றிய வெங்காயத்தாள்களை சுத்தம் செய்து நறுக்கி தாளித்துகொஞ்சம் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்துசிறிது நீர் தெளித்து வேகவிடவும்.

வரமிளகாய்தனியாசீரகம் மிளகுகறிவேப்பிலையை எண்ணெயிட்டு வறுத்துபொடியாக்கிஅதனோடு வறுத்த நிலக்கடலைபோட்டுப் பொடியாக்கி தாள் வெந்ததும் இந்தத் தூளைத் தூவி இறக்கவும்எதனோடும் இணையும் டேஸ்ட்டி டேஸ்ட்டி யம்மி யம்மிதொடுகறி தயார்.

வெங்காயத்தாள் தொடுகறி: இந்த புதுமையான,சுவைமிகுந்த பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Vijayapriya Panneerselvam" அவர்களுக்கு நன்றி  :)

மிக்ஸ்ட் வெஜிடபிள் அடை





தேவையான பொருட்கள் :
1. வேக வைத்த சர்க்கரைவள்ளி கிழங்கு ஒன்று ..... நன்றாக மசித்து வைக்கவும்
முள்ளங்கி இரண்டு , காரெட் ஒன்று , வெங்காயம் இரண்டு இவை துருவியது
3. 
பச்சை மிளகாய் நான்கு , இஞ்சி ஒரு துண்டு அரைத்து வைக்கவும்
மிளகு இரண்டு டேபிள் ஸ்பூன் பொடித்தது , பிளாக்ஸ் பொடி ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு தேவையான அளவு 1,2,3,4, . ..இவைஎல்லாவற்றையும் ஒன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
5.. 
நெய் அல்லது வெண்ணெய்

செய்முறை:

ஒரு வாழை இலை அல்லது பொலிதீன் ஷீட்ல இந்த பிசைந்த கலவையை தேவையான அளவு உருட்டி கையால் அடை போல தட்டிஒரு நான்ஸ்டிக் தவா வில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு சிறிய தீயில் நிதானமாக இரண்டு பக்கமும் பொன்னிறமாகவரும்வரை வேகவைத்து எடுத்து வேண்டிய ஊறுகாய் அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிடவும்.

மிக்ஸ்ட் வெஜிடபிள் அடை: வாவ் என்று சொல்லக்கூடிய இந்த சுவையான, ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய அம்மா "Dolly Bala"அவர்களுக்கு நன்றி :)

பரங்கிக்காய் திக் கிரேவி


தேவையான பொருட்கள்:
பரங்கிக்காய் 
தெங்காய் எண்ணை 
இஞ்சி 
கடுகு 
தேங்காய் 
தேங்காய் பால் 
மஞ்சள்தூள்
உப்பு 

செய்முறை:
பரங்கிக்காயை கொஞ்சம் பெரிய துண்டுகளாய் வெட்டிக்கொண்டு அதை ஒரு வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டுநன்றாக வேகும்வரை வதக்கி கொள்ளவும் ..கொஞ்சம் கொஞ்சமாக அதன் மேல் தண்ணீர் தெளித்து வேகவிட வேண்டும் ... வெந்தகாயில் கொஞ்சம் இஞ்சி , கடுகு , தேங்காய் மூன்றையும் சேர்த்து அரைத்து விட்டு கொஞ்ச நேரம் கொதிக்கவிட்டு பின் அதில் ஒருதேங்காய் உடைத்து துருவி கெட்டி பால் எடுத்து அதனுடன் சேர்த்து ஒரு கிளறு கிளறிவிட்டு உப்பு , மஞ்சள்தூள் சேர்த்து பின் உடனேஇறக்கி வைக்கவேண்டும்

கடாய் சிக்கன்



தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
சதுரமாக வெட்டிய வெங்காயம் - 1 கப் 
சதுரமாக வெட்டிய குடைமிளகாய் - 1 கப் 
வேகவைத்து,தோலுரித்து அரைத்த தக்காளி - 1 கப் 
வெண்ணெய்  - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்  - சிறிதளவு 
வரமிளகாய் தூள்  - 2 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1 டீஸ்பூன் 
உப்பு தேவையான அளவு 
பால் - 1 டேபிள்ஸ்பூன் 

வறுத்து அரைக்க தேவையானவை: 
வரமிளகாய் - 3 
குறுமிளகு  - 10 
சீரகம் - 1 டீஸ்பூன் 
சோம்பு  - 1 டீஸ்பூன் 
கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 5 
காய்ந்த வெந்தய கீரை (கஸ்தூரி மேத்தி) - சிறிது 

செய்முறை:
* மேலே வருக்க கொடுத்தவைகளை வெறும் சட்டியில் வறுத்து பொடித்து 2 பாகங்களா வைக்கவும்.
*  சிக்கன், உப்பு,மஞ்சள் தூள்,வரமிளகாய் தூள் சேர்த்து நன்கு பிசறி வைக்கவும். இதனை சிறிது எண்ணெய்  சேர்த்து பானில் (pan) வறுத்து வைக்கவும் (பொரிக்க கூடாது). 
* ஒரு கடாயில் (கடாய் பன்னீர் கடையில் தான் சமைக்க வேண்டுமாம்) வெண்ணை விட்டு பாதி உருகியதும், வறுத்து அரைத்த பவுடரில் பாதியை வெண்ணையில் சேர்த்து வதக்கவும். 
* வெண்ணெய்  முழுதும் உருகி, பவுடர் வதங்கி கொண்டிருக்கும் போது,அடுப்பை சிறு தீயில் வைத்து  வரமிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
* இப்பொழுது சதுரமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
* இவற்றுடன் அரைத்த தக்காளி விழுதினை சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்.
* நன்கு தக்காளியின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பின்பு உப்பு சேர்த்து கிளறவும்.
* இத்துடன் வறுத்த சிக்கனை சேர்த்து மெதுவாக கிளறவும்.
* பின்பு அரைத்த பவுடரில் மீதமுள்ள பாதியை சேர்த்து கிளறவும்.
* இத்துடன் பாலினை சேர்த்து ஒரு கொதி வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும். 

பன்னீர்



தேவையான பொருட்கள்:
முழு கொழுப்புள்ள பால் - 1 லிட்டர் 
எழுமிச்சை சாறு அல்லது வினிகர்  - 2 டு 3 பழம் / 3 டு 5 tbsp வினிகர் 
சீஸ் க்ளோத் (cheese cloth) அல்லது புதிய வெள்ளை துணி/துண்டு  - 1 

செய்முறை: 
* கெட்டியான பாத்திரத்தில் பாலை காயவைக்கவும். 
* பால் கொதிக்க ஆரம்பித்தவுடனே, எழுமிச்சை சாறு அல்லது வினிகர் ஊற்றவும்.
* சிறுதீயில் 2 நிமிடங்கள் வேகவிடவும். 
* இந்த திரிந்த பாலை சீஸ் க்ளோத் (cheese cloth) அல்லது புதிய வெள்ளை துணி/துண்டு ஊற்றி தண்ணீரை வடிக்கவும்.
* ஒரு காய் கழுவும் சல்லடையை மேல் பகுதி கீழ் இருக்குமாறு கமுத்தி வைக்கவும்.
* இந்த பன்னீர் மூட்டையை சிறிது தளர்த்தி, சல்லடையின் அடிப்பகுதியின் மீது பரப்பிய  நிலையில் வைக்கவும்.
* சலடையின் அடிப்பகுதிக்கு தகுந்தவாறு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி பன்னீர் துணியின் மேல் வைக்கவும். 
* குறைந்தது ஒரு மணிநேரம் கழித்து எடுக்கவும். பன்னீரில் உள்ள தண்ணீர் நீங்கி கெட்டி பன்னீர் கிடைக்கும்.
* இதனை சிறு சிறு துண்டங்களாக வெட்டி,ஒரு கண்ணாடி குவளையில் போட்டு மூடி, குளிர்சாதன பெட்டியில் வைத்தால் ரொம்ப நாள் கெடாமல் இருக்கும்.

சமையல் குறிப்பு: மைதிலி தியாகு

குறிப்பு:  1 லிட்டர் பாலுக்கு 1/2 எழுமிச்சை சாறு விடலாம் (சாறு நிறையா இருக்கும் பழமாக இருந்தால்இல்லையென்றால் 1 முழுபழம்). பால் அடுப்பில் வைத்து காயவைக்கும் போது கிளறி விடவும்அப்போ தான் பொங்கி வராமல் கொதிக்கும்ஒரு கொதி வந்ததும்எழுமிச்சை சாறு ஊற்றிஅடுப்பை வேகமான தீயில் வைக்கவும்நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் திரிந்து வரும்அப்படி வரவில்லைஎன்றால் கொஞ்சம் எழுமிச்சை சாறு சேர்க்கவும் (பன்னீர் ரொம்ப புளிக்காதுவினிகர் சேர்த்தால் தான் கொஞ்சம் அதிகமாலும்புளிப்புவினிகர் வாடை வரும்). நன்கு பால் திரிந்ததும் அப்படியே சிறிது நேரம் அணைத்த அடுப்பில் வைக்கவும்பின்பு சமையல் குறிப்பில்குறிபிட்டது போல துணியில் வடிகட்டவும்அதிக நேரம் வடிந்தால்நல்ல பன்னீர் கிடைக்கும்.

முட்டை பணியாரம்



தேவையான பொருட்கள்:
முட்டை - 4
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
பொடியாக நறுக்கிய முட்டை கோஸ்  - 1/3
துருவிய காரட் - 1
பொடியாக நறுக்கிய குடை மிளகாய் - 1NON
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - கொஞ்சம்
பொடியாக நறுக்கிய புதினா -  கொஞ்சம்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - கொஞ்சம்
உப்பு  - தேவையான அளவு
மிளகுத்தூள்  - 1 சிட்டிகை
நெய்/ எண்ணெய்


செய்முறை:
* ஒரு வாணலியில் நெய்/தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் வதக்கவும். பச்சை மிளகாய் வெள்ளை ஆனதும், வெங்காயம் வதக்கவும்.
* சிறிது வெங்காயம் வதங்கிய பின், குடை மிளகாய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
* பின்பு முட்டை கோஸ்,காரட் சேர்த்து பிரட்டி விடவும். இந்த காய்கள் சேர்த்த பின்பு ரொம்ப வதக்கத்  தேவையில்லை.
* இப்போது அடுப்பை அனைத்து, புதினா,கொத்தமல்லி சேர்க்கவும். நன்கு கலக்கி விடவும்.
* ஒரு பாத்திரத்தில் முட்டை உடைத்து நன்கு அடிக்கவும். இத்துடன் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலக்கவும்.
* முட்டையுடன் வதக்கிய  காய்களை கலக்கவும்.
* பனியாரக்கல் சூடேறியதும் முட்டைக் கலவையை பணியாரம் போல் நெய்யில் வார்த்து/சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: பேலியோ தக்காளி சட்னியுடன் 2 பணியாரம் அதிகமாக உள்ளே போகும். பேலியோ தக்காளி சட்னியை  கூடிய விரைவில் சமையல் குறிப்பில் சேர்த்துவிடுகிறேன் :)

புதினா ப்ரோக்கோலி (Mint Broccoli)



தேவையான பொருட்கள்:
ப்ரோக்கோலி - 1
வெங்காயம் - 1/4
வட்டமாக நறுக்கிய காரட் - 1
புதினா - 1 சிறிய கப்
எழுமிச்சை சாறு - 1/2  tbsp
உப்பு தேவையான அளவு
மிளகுத்தூள்  - சிறிது
தேங்காய் எண்ணெய்

செய்முறை:
* வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் வத்தவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின், காரட் சேர்க்கவும்.
* இரண்டும் ஓரளவும் வதங்கிய பின் ப்ரோக்கோலி சேர்த்து 8 -10 நிமிடங்கள் வத்தவும். தேவை என்றால் தண்ணீர் தெளிக்கலாம். நான் தண்ணீர் விடவில்லை. ப்ரோக்கோலி அதிகம் வேகவேண்டியதில்லை. கடிப்பதற்கு நறுக்கென்று இருக்க வேண்டும்.
* இப்போது புதினா சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிடவும்.
* ஹிமாலயா உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கிளறவும். இத்துடன் எழுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும்.

குறிப்பு: இது "ரத்தினகுமார் ஸ்பெஷல் முட்டை/பன்னீர் வறுவல்" சமையல் குறிப்பில் இருந்து கண்டுபிக்கப்படது. ஆகையால் அவருக்கு மிகவும் நன்றி.

திலபியா புட்டு (Tilapia puttu)



தேவையான பொருட்கள்:
திலபியா மீன் பில்லெட் (fillet) - 2
வெங்காயம் - 1/2
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது  - 1
கறிவேப்பிலை  - சிறிது
மிளகாய்த்தூள்  - 1 tsp
மல்லித்தூள்  - 1 tsp
பட்டை -  1
கிராம்பு  - 2
பிரியாணி இலை - 1
உப்பு தேவையான அளவு
தேங்காய் எண்ணெய்

ஊறவைக்க:
திலபியா மீன் பில்லெட்
மஞ்சள் தூள்
மிளகாய்த்தூள்
உப்பு
எழுமிச்சை சாரு

செய்முறை:
* தோசைக்கலில் சிறிது எண்ணெய் விட்டு திலபியா மீனை இருபுறமும் சுட்டு, உதிர்த்து வைக்கவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் காயவைத்து, சோம்பு,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை சேர்த்து பொரிக்கவும் .
* இப்போது வெங்காயம்,பச்சைமிளகாய்  சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து, பச்ச வாசனை போகும்வரை வதக்கவும்.
*  இப்போது மிளகாய்த்தூள்,மல்லித்தூள்  மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பொடிகளின் பச்ச வாசனை போகும்வரை வதக்கவும்.  பின்பு நிளவாக்கில் லேசாக அறிந்த தக்காளி சேர்க்கவும். மூடிவைத்து 3 நிமிடங்கள் வேகவிடவும்.
* நன்கு தக்காளி வெந்து, எண்ணெய் பிரிந்து வரும்போது, சுட்டு உதிர்த்த மீனை சேர்த்து கிளறவும். மெதுவாக கிளற வேண்டும்.
* பச்ச கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

குறிப்பு: தோசைக் கல்லில் தோலுடன் மீனைச் சுட்டால், ஒட்டிவிடும். தோலை தனியாக வதக்கி,கட் செய்து இத்துடன் சேர்க்கலாம் .

செம்மறியாட்டுத்தோள்பட்டை சூப்




எலும்புகள்மூட்டுகளுக்கு நலமளிக்கும் செம்மறியாட்டுத்தோள்பட்டை   சூப்
செம்மறிஆட்டின் தோல்ப்பகுதி தசை மற்றும் எலும்புமஜ்ஜை ஆகியவற்றால் செய்த சூப் இதுஎலும்புமஜ்ஜை உலகின் முதல் சூப்பர்புட் என அழைக்கப்படுகிறதுஅதில் சூப் செய்து அருந்தினால் எலும்புகளுக்கு நலனளிக்கும் கால்ஷியம்மக்னிசியம் முதலானமினரல்கள் அனைத்தும் கிடைக்கும்.

தேவையான பொருட்கள் :
150 கிராம் தோளெலும்பு
1- 2 
சின்ன உருளைக்கிழங்கு
காரட்
செலரி துண்டுகள்
உப்புமசாலா தேவைக்கேற்பநான் பயன்படுத்தியது 2 ஸ்பூன் உப்பு, 2 ஸ்பூன் சாம்பார் பொடி, 1 ஸ்பூன் கரம் மசாலா, 1 ஸ்பூன்மல்லிப்பொடி

செய்முறை:
* வாணலியில் நெய்யை விட்டு தோளெலும்பு பகுதிகளை அதில் விட்டு நன்றாக பிரவுன் நிறம் வரும் வரை இருபுறமும்திருப்பிபோட்டு வணக்கவேண்டும்இப்படி வணக்குவது அதன் சுவையை அதிகரிக்கும்.
* அதன்பின் மாமிசத்தை ஸ்லோகுக்கரில் இட்டுமேலே வெட்டிய காய்கறிகளை போட்டு மசாலாவை சேர்த்து இவை எல்லாம்மூழ்கும் அளவுக்கு சற்று மேல் நீரை ஊற்றி மூடிவிடவேண்டும்ஸ்லோகுக்கரில் 3 மணிநேரத்தில் சுவையான சூப் தயாராகிவிடும்.

குறிப்பு: ஸ்லோகுக்கர் இல்லையெனில் சாதாரண மூடி போட்ட பாத்திரத்தில் மூடி அடுப்பை மிதவெப்பத்தில் வைத்துமூன்றுமணிநேரம் சமைக்கலாம்.

தகவல்: சூப்பின் புகைப்படத்தில் எண்ணெய்படலம் போல் மிதப்பது முழுக்க உறைகொழுப்புஇதை பகுதி உண்டுவிட்டுப்ரிட்ஜில்வைத்து அடுத்தநாள் எடுத்துப்பார்த்தால் கொழுப்புப்படலம் மேலே ஜெலடினாக படிவதைக்காணலாம்ஜெலடின் நம் எலும்புகளுக்குமிக நல்லது.
அதனால் முதல்நாள் சிறிது திரவம்மற்றும் அனைத்துக்காய்கறிமாமிசத்தையும் உண்டுவிட்டு மீதமிருந்த சூப்புத்திரவத்தைப்ரிட்ஜில் வைத்தேன்அடுத்தநாள் கடும்குளிரில் திரவத்தை காப்பிக்கோப்பையில் ஊற்றிப்பருகுகையில் குளிருக்கு மிக இதமாகஇருந்தது

தினந்தோறும் இத்தகைய்சூப்புகளைப்பருகிவருவதால் இக்குளிர்காலத்தில் சளிகாய்ச்சல் என எத்தொல்லையும் இல்லாமல்இருக்கிறேன்.


இந்த சுவையான, ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "Neander Selvan" அவர்களுக்கு நன்றி.
scotch eggs for dinner


Ingredients:
Potatoes half a kilo , boiled and mashed well
Eggs. Four ...hard boiled shelled and pricked well
One egg beaten
Almond flour. Two tbsp
Mixed herbs. One tbsp
Pepper powder. Two tbsp
Salt to taste
Ghee. Four tbsp
Mix herbs, salt, pepper, almond flour with the mashed potatoes and knead well so that it turns like dough.
Make four palm size patties with the dough and place the egg in the center and cover it from all sides ..now it is like a ball..dip these balls in the beaten egg and cook them in a kadai in very low flame one by one adding one tbsp ghee to each...Turn them slowly in all sides so that they are roasted uniformly.. Since we cook in very low flame the potato balls don't turn black..Remove them allow it to cool and cut them into halves and serve with sauce if needed.. Its very filling..could eat just one egg ...but very tasty

Originally scotch eggs are made with minced pork or meat and then baked or deep fried.

காலிஃ ப்ளவேர் கஸ்ஸி / கோரி அல்லது மீன் கஸ்ஸி (gassi )



இது கர்நாடகாவில் குறிப்பாக மங்களூரில் மிக பிரபலமான உணவு ..இதை கோழி (கோரி ) அல்லது மீன் வைத்துதான் செய்வார்கள்..நான் இங்கே காலிஃ ப்ளவேர்  உபயோகித்துள்ளேன் .

தேவை ...ஒரு பெரிய காலிஃ ப்ளவேர் , அல்லது அரைகிலோ கோழி ,// மீன்

1...அரை மூடி தேங்காய் அரைத்து எடுத்த கெட்டியான தேங்காய் பால்
-- 
2..ஒரு வாணலியில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் அதில் கடுகு , கறிவேப்பிலை சேர்த்து சுத்தம் செய்த காய் /கோழி , மீன் சேர்த்து நன்றாக வதக்கி பின் நீர் தேவையான அளவு சேர்த்து நன்றாக வேகவிடவும் ..

3..மசாலா வறுத்து அரைக்க :: ஒரு மேசை கரண்டி அளவு  சீரகம் , சோம்பு , மல்லி விதை , அரை மேசை கரண்டி கசகசா,மிளகு  தேவையான அளவு வரமிளகாய் ..இவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து வைத்துக்கொள்ளவும் .

4..நறுக்கிய வெங்காயம் இரண்டு , தக்காளி ஒன்று  இதையும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கி அரைத்து கொள்ளவும்

5..தேவையான பூண்டு அரைக்கவும் ..

6..ஒரு வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு அரைத்த இந்த விழுதுகளை நன்றாக வதக்கி அத்துடன் மசாலா பொடியையும்சேர்த்து வேகவைத்த காய்/கோழி/மீன் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு பின் அதில் உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து விடவும் ..


7..இறக்கி வைத்து அதில் அரைத்து எடுத்த தேங்காய் பால்,   மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிடவும் ..இதை நீர் தோசை அல்லது சாதத்துடன்சேர்த்து சாப்பிடுவார்கள் ..நமக்கு இது மட்டுமே உணவு


இந்த சுவையான, அருமையான, வித்தியாசமான சமையலைக் கற்றுக்கொடுத்த "Dolly Bala" அம்மா அவர்களுக்கு நன்றி :)

Like Us Facebook

Categories

Unordered List

Sample Text

Blog Archive

Subscribe Via Email

Sign up for our newsletter, and well send you news and tutorials on web design, coding, business, and more! You'll also receive these great gifts:

Blog Archive

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Social Icons

Pages

BTemplates.com

Popular Posts

Popular Posts

Slider[Style1]

Find Us On Facebook

About us

Video Of Day

Popular Posts

Recent Posts

Text Widget