வெஜிடபுள் & முட்டை அடை - VEGETABLE
MUTTAI ADAI
MUTTAI ADAI
தேவையான பொருட்கள் :
முட்டை : 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
குடைமிளகாய் - சிறிதளவு
துருவிய காரட் - 2
சிறிதாக நறுக்கிய முட்டைகோஸ் : 150 கிராம்
பச்சை மிளகாய் - 4 சிறிதாக நறுக்கியது
மிளகு சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
நெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி & கறிவேப்பிலை - சிறிதளவு
வெங்காயம் - 1
தக்காளி - 1
குடைமிளகாய் - சிறிதளவு
துருவிய காரட் - 2
சிறிதாக நறுக்கிய முட்டைகோஸ் : 150 கிராம்
பச்சை மிளகாய் - 4 சிறிதாக நறுக்கியது
மிளகு சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
நெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி & கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
ஒரு கடாயில் நெய் விட்டு, கறிவேப்பிலை , பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது , வெங்காயம், முட்டைகோஸ், கேரட், தக்காளி & குடைமிளகாய் ஆகியவற்றை வரிசைப்படி ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும், முக்கால் பாகம் வதங்கியவுடம் (முழுவதும் வதங்காமல் இருந்தால் மட்டும் சாப்பிட சுவை தரும்), உப்பு மஞ்சள் தூள் & மிளகுத்தூள் சேர்த்து இறக்கி விடவும்.
ஆறியவுடன், முட்டைகளை சேர்த்து அடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலக்கவும்.
ஒரு இரும்பு தவாவில் நெய் விட்டு அடைபோல் ஊற்றி எடுக்கவும்.
வெஜிடபுள் & முட்டை அடை தயார்.
தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவை கூடும்.


0 comments:
Post a Comment