சீஸ் போண்டா - CHEESE PONDA
தேவையான பொருட்கள்:
- துருவிய சீஸ் - அரை கப்
- மைதா மாவு - ஒரு கப்
- முந்திரிப்பருப்பு - 15
- மல்லிக்கீரை - பாதி கட்டு
- பச்சை மிளகாய் - 5
- ரஸ்க் தூள் - அரை கப்
- எண்ணெய் - சுமார் அரை லிட்டர்
- உப்பு - 3/4 ஸ்பூன்
செய்முறை:
- பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பை பொடியாக நறுக்கி, அத்துடன் எண்ணெய், ரஸ்க் தூள் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
- எண்ணெயை காயவைத்து ரஸ்க் தூளில் உருண்டைகளை புரட்டி, உடனே பொரித்தெடுக்கவும்.


0 comments:
Post a Comment