கருணைக்கிழங்கு குழம்பு - karunai kilangu kulambu
தேவையான பொருட்கள்:
- கருணைக்கிழங்கு - கால் கிலோ
- மிளகாய் வற்றல் - 5
- சீரகம் - 3 தேக்கரண்டி
- சிறிய வெங்காயம் - 10
- புளி - சிறிய எலுமிச்சை அளவு
- மஞ்சள் பொடி - அரைத் தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- கருணைக்கிழங்கினை வேக வைத்து எடுத்து, தோலை உரித்துவிட்டு சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
- மிளகாய் வற்றல், சீரகம், உரித்த வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாய் அரைத்துக் கொள்ளவும்.
- புளியை சற்று ஊற வைத்து, கரைத்து எடுத்துக் கொள்ளவும். அந்த புளித் தண்ணீரில் அரைத்த மசாலாவினையும், சிறிது மஞ்சத்தூள் மற்றும் தேவையான உப்பு போட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் அவித்த கருணைக்கிழங்குகளைப் போட்டு, புளித் தண்ணீரில் கரைத்த மசாலாவினையும் ஊற்றி கொதிக்க விடவும்.
- குழம்பு நன்றாக கொதித்து கெட்டியானவுடன் லேசானத் தீயில் வைத்து எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கவும்.


0 comments:
Post a Comment