தேவையான பொருட்கள்:
- மைதா - இரண்டு கப்
- முட்டை - இரண்டு
- தேங்காய் பால் - ஒரு டம்ளர்
- சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
- வெங்காயம் - இரண்டு
- பச்சை மிளகாய் - மூன்று
- உப்பு - ஒரு தேக்கரன்டி
- இட்லி சோடா - ஒரு பின்ச்
செய்முறை:
- முட்டையை நுரை பொங்க அடித்து வைக்க வேண்டும்.
- உப்பு, பச்சை மிளகாய், வெங்காயம், சோம்பு, தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
- மைதா மாவில் அரைத்ததை வடிகட்டி ஊற்ற வேண்டும்.
- பிறகு அடித்து வைத்துள்ள முட்டை, தேங்காய் பால், இட்லி சோடா சேர்த்து கலக்கவும்.
- தோசை மாவு பதத்திற்கு, தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
- இப்போது தோசைகளாக வார்க்கவும்.


0 comments:
Post a Comment