தேவையான பொருட்கள்:
- மாங்காய் - ஒன்று
- புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு
- தக்காளி - ஒன்று
- வறுத்து அரைக்க தேவையானவை :
- வரமிளகாய் - 5
- மல்லி விதை - 4 தேக்கரண்டி
- மிளகு - கால் தேக்கரண்டி
- சீரகம் - அரை தேக்கரண்டி
- வெந்தயம் - கால் தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 6
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- தேங்காய் துருவல் - அரை கப்
- தாளிக்க :
- கடுகு - ஒரு தேக்கரண்டி
- உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
- சீரகம் - அரை தேக்கரண்டி
- வெந்தயம் - கால் தேக்கரண்டி
- கறிவடகம் - ஒரு தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 10
- கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் 5 தேக்கரண்டி ஊற்றி தாளிப்பு சாமான்களை போட்டு தாளித்து தக்காளியையும் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலாவை போடவும். புளியை கரைத்து ஊற்றவும்.
- நறுக்கிய மாங்காயை போட்டு உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விட்டு எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.

0 comments:
Post a Comment