கடப்பா - KADAPPA
தேவையான பொருட்கள்:
- பயத்தம் பருப்பு - கால் கப்
- பொட்டுக்கடலை - கால் கப்
- பச்சை பட்டாணி - கால் கப்
- பட்டை - 2
- கிராம்பு - 2 அல்லது 3
- ஏலக்காய் - ஒன்று அல்லது 2
- கசகசா - ஒரு தேக்கரண்டி
- சோம்பு - 2 தேக்கரண்டி
- பிரிஞ்ஜி இலை - 2
- மராத்தி மொக்கு - 2
- பூண்டு - 3
- இஞ்சி - சிறிய துண்டு
- தேங்காய் - அரை மூடி
- பெரிய வெங்காயம் - 3
- சின்ன வெங்காயம் - 100 கிராம்
- உருளைக்கிழங்கு - 3
- தக்காளி - 3
- புளி - எலுமிச்சம்பழ அளவு
- கொத்தமல்லித் தழை - சிறிது
- பச்சை மிளகாய் - 8
- எண்ணேய்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:

முதலில் பூண்டைத் தோலுரித்து வைக்கவும். பயத்தம் பருப்பு, பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலையுடன் தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, பாதி அளவு பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வைக்கவும். புளியைக் கரைத்துக் கொள்ளவும்.

வேக வைத்த உருளைக்கிழங்கைத் தோலுரித்து துண்டுகளாக்கி வைக்கவும்.

வாணலியில் 2 அல்லது 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்ஜி இலை, கசகசா, மராத்தி மொக்கு ஆகியவற்றைப் போட்டுப் பொரிக்கவும். பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் புளிக் கரைசல் ஊற்றி, நறுக்கிய தக்காளி மற்றும் மீதமுள்ள பூண்டு சேர்க்கவும்.

அத்துடன் அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலைக் கலவையைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்றாக கொதிக்கவிடவும்.

கொதிக்கும் போதே வேக வைத்த பச்சை பட்டாணி, பயத்தம் பருப்பு மற்றும் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.

நன்றாக கொதித்த பிறகு உருளைக்கிழங்கைச் சேர்த்து, சிறிது நேரம் கழித்து இறக்கி, கொத்தமல்லித் தழை தூவவும்.

இட்லி, தோசைக்குப் பொருத்தமான, சுவையான கடப்பா தயார்.


0 comments:
Post a Comment