காஷ்மீர் ரொட்டி - KASHMIRI ROTI
தேவையான பொருட்கள்:
- மைதா மாவு - 200 கிராம்
- சலிக்காத கோதுமை மாவு - 200 கிராம்
- கலக்கிய கெட்டி தயிர் - 3 தேக்கரண்டி
- ப்ரெட் ஸ்லைஸ் - ஒன்று
- பால் - கால் கப்
- சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
- சீரகம், வெங்காய விதை, பெருஞ்சீரகம் - தலா கால் தேக்கரண்டி
- உப்பு - ஒரு ஸ்பூன்
செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் சலிக்காத கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை, சீரகம், வெங்காய விதை, மற்றும் பெருஞ்சீரகம் சேர்க்கவும்.

அதனுடன் கலக்கிய கெட்டித் தயிர் மற்றும் ப்ரெட் ஸ்லைஸின் ஓரங்களை நீக்கிவிட்டு, பாலில் நனைத்து பிழிந்து சேர்த்து நன்றாகப் பிசையவும்.

பிசைந்த மாவை ரொட்டிகளாக தேய்க்கவும்.

தோசைக் கல்லை நன்றாகச் சூடாக்கி, ரொட்டியைப் போட்டு (எண்ணெய் சேர்க்காமல்) இருபுறத்தையும் நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான காஷ்மீர் ரொட்டி தயார்.

0 comments:
Post a Comment