தேங்காய்ப்பால் சூப் - COCONUT MILK SOUP
தேவையான பொருட்கள்:
- மஷ்ரூம் - 10
- காலங்கால்(தாய்லாந்து இஞ்சி) - ஒரு பெரிய துண்டு அல்லது இஞ்சி - ஒரு பெரிய துண்டு
- லெமன் கிராஸ் - 2
- எலுமிச்சை இலைகள் - 6
- சீலரி - ஒன்று
- பச்சை மிளகாய் - 3 (இரண்டாக கீறியது)
- பொடித்த காய்ந்த மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்
- திக்கான தேங்காய்ப்பால் - 2 கப்
- எலுமிச்சையின் சாறு - 1/2 பழத்தின் சாறு
- உப்பு - ஒரு ஸ்பூன்
- சீனி - 2 ஸ்பூன்
- சோயா சாஸ் - 1/2 ஸ்பூன்
- வெங்காய தழைகள் - 5
- கொத்தமல்லி - ஒரு பிடி
- தண்ணீர் - ஒரு கப்
செய்முறை:
- மஷ்ரூமை சுத்தம் செய்து சிறுத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- லெமன் கிராஸ்(வெள்ளை நிற உட்பகுதி), செலரி, வெங்காய தாள்களை சிறியதாக அரிந்துக் கொள்ளவும்.
- இஞ்சியை பெரிய துண்டுகளாக(வட்ட வடிவில்) நறுக்கவும்.
- ஒரு பத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மஷ்ரூம், லெமன் கிராஸ், இலைகள், உப்பு, சீனி,காலங்கால்(இஞ்சி), சீலரி, பொடித்த மிளகாய்த்தூள், பச்சை மிளகாய் போட்டு 7 நிமிடம் கொதிக்க விடவும்.
- தேங்காய்ப்பால் சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் எரிய விடவும். தேங்காய்ப்பாலை அதிக தீயில் கொதிக்க விட்டால் திரிந்து விடும்.
- 2 நிமிடம் கழித்து சோயாசாஸ் ஊற்றவும்.
- கொத்தமல்லி, வெங்காயத்தாள்களை தூவி இறக்கவும். எலுமிச்சை சாறை சேர்க்கவும். எப்போதும் எலுமிச்சை சாறை இறக்கிய பின்தான் ஊற்ற வேண்டும். இல்லாவிடில் டேஸ்ட் மாறிவிடும்.


0 comments:
Post a Comment