ஃபுரோக்கோலி பஜ்ஜி - BROCCOLI BHAJI
தேவையான பொருட்கள்:
- ஃபுரோக்கோலி - 1
- கடலை மாவு - 200 கி
- மைதா - 2 ஸ்பூன்
- அரிசி மாவு - 2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- உப்பு - சிறிது
- எண்ணெய் - பொரித்தெடுக்க
செய்முறை:
- புரோக்கோலியை கொஞ்சம் காம்புடன் வைத்து சிறுசிறு துண்டுகளாக அரிந்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும்.
- ஒரு சட்டியில் தண்ணீர் வைத்து நன்றாக கொதிக்க விட்டு,புரொக்கோலி மீது மூழ்கும் அளவுக்கு ஊற்றி கொஞ்ச நேரம் அப்படியே வைக்கவும்.
- சுடுநீரில் கொஞ்ச நேரம் போட்டால் அதில் புழு பூச்சிகள் இருந்தால் அவைகள் இறந்துவிடும்.
- பிறகு நீரை வடிகட்டி வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,மைதா,அரிசி மாவு, மிளகாய் தூள்,கொஞ்சம் உப்பு போட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.
- கரைத்த மாவில் ஒவ்வொரு துண்டு புரோக்கோலியையும் நனைத்து எண்ணெயில் போட்டு பஜ்ஜி போல் பொரித்துஎடுக்கவும்.சூடாக சாப்பிட நன்றாக இருக்கும்.மிளகாய் சாஸ் வைத்து பரிமாறவும்.

0 comments:
Post a Comment