எள் துவையல் - GINGELLY THUVAIYAL
தேவையான பொருட்கள்:
- எள்ளு - ஒரு படி
- உளுந்து - 4 தேக்கரண்டி
- மிளகாய் வற்றல் - 3
- புளி - 10 கிராம்
- பெருங்காயம் - 10 கிராம்
- உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
- வாணலியில் சுத்தம் செய்த எள்ளை போட்டு நன்றாக வறுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டிக் கொள்ளவும்.
- பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், உளுந்து, பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டுச் நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும்.
- மிக்ஸியில் மிளகாய் வற்றல், உளுந்து, பெருங்காயம், புளி, உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- அதனுடன் வறுத்து வைத்த எள்ளையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.


0 comments:
Post a Comment