இஞ்சி, முந்திரி பக்கோடா

தேவையான பொருட்கள்:
- கடலை மாவு - அரை கப்
- அரிசி மாவு - 4 மேசைக்கரண்டி
- சோள மாவு - 4 மேசைக்கரண்டி
- வெங்காயம் - ஒன்று
- இஞ்சி - ஒரு சிறுதுண்டு
- மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
- முந்திரி - 15
- கறிவேப்பிலை - சிறிதளவு
- மல்லி இலை - சிறிதளவு (விரும்பினால்)
- உப்பு - தேவைக்கு
- எண்ணெய் - பொரிக்க
செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.

வெங்காயம் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும். முந்திரியை ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும்.

எல்லாவற்றையும் மாவு கலவையில் சேர்க்கவும்.

மாவு கலவையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பக்கோடா மாவு பதத்தில் பிசையவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி சிறிது சிறிதாக கிள்ளி போட்டு பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.

சுவையான இஞ்சி, முந்திரி பக்கோடா தயார்.

0 comments:
Post a Comment