கோழி உப்புக்கறி

தேவையான பொருட்கள்:
- கோழி - அரை கிலோ
- பெரிய வெங்காயம் - ஒன்று
- தக்காளி - ஒன்று
- இஞ்சி சாறு - ஒன்றரை மேசைக்கரண்டி
- மிளகாய் வற்றல் - 5
- பூண்டு விழுது - ஒன்றரை தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
- உளுந்து - அரை தேக்கரண்டி
- வெந்தயம் - அரை தேக்கரண்டி
- கடுகு - அரை தேக்கரண்டி
- சீரகம் - அரை தேக்கரண்டி
- பட்டை - சிறு துண்டு
- கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு
- கறிவேப்பிலை - சிறிது
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:

வெங்காயத்தை நீளவாட்டிலும், தக்காளியைச் சிறு துண்டுகளாகவும் நறுக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். கோழியைச் சுத்தம் செய்து துண்டுகளாக்கி வைக்கவும்.

சுத்தம் செய்த கோழித் துண்டுகளுடன் இஞ்சி சாறு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துப் பிரட்டி சுமார் 4 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கடுகு, சீரகம், வெந்தயம், உளுந்து, மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். கடுகு வெடித்ததும் பூண்டு விழுதைச் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.

பிறகு வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து தீயைச் சற்றுக் கூடுதலாக வைத்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும்.

பிறகு ஊற வைத்திருக்கும் கோழித் துண்டுகளைச் சேர்த்து நன்கு பிரட்டி வேகவிடவும்.

கோழி நன்றாக வெந்து மிருதுவானவுடன் கொத்தமல்லித் தழைத் தூவி இறக்கிக் பரிமாறவும். சுவையான கோழி உப்புக்கறி ரெடி

0 comments:
Post a Comment