டால் பாலக்

தேவையான பொருட்கள்:
- துவரம்பருப்பு - கால் கோப்பை
- ஸ்பைனாச் - ஒரு பாக்கெட்
- வெங்காயம் - ஒன்று
- பச்சைமிளகாய் - 2
- தக்காளி - ஒன்று
- பூண்டு - 5 பற்கள்
- உப்பு - தேவைக்கு
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
- கடுகு, சீரகம், - தலா அரை தேக்கரண்டி
- பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - இரண்டு
- நெய், எண்ணெய் - அரை தேக்கரண்டி
செய்முறை:

கீரை, வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, பூண்டு சேர்த்து தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.

பருப்பை சுத்தம் செய்து குக்கரில் போட்டு ஒரு கோப்பை தண்ணீர், மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து வேக வைக்கவும்.

கீரை வெங்காயக் கலவை வெந்ததும் வெந்த பருப்பு, உப்பு சேர்த்து ஒரு கொதி விடவும்.

வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து கீரையில் கொட்டி கிளறி இறக்கவும்.

இறக்கியதும் மத்து அல்லது ப்ளெண்டர் வைத்து மசித்து நெய் விட்டு பரிமாறவும்.

0 comments:
Post a Comment