கோழி பால்குருமா

தேவையான பொருட்கள்:
- கோழி =1/2கி
- பால் =1கிளாஸ்
- இஞ்சி பூண்டு விழுது=2டீஸ்பூன்
- வெங்காயம் =1பெரியது
- தக்காளி =2
- ப.மிளகாய் =10
- தேங்காய் =4சில்
- முந்திரி =10
- சோம்பு =1தேக்கரண்டி
- பட்டை, கிராம்பு,ஏலக்காய்,பிரிஞ்சி இலை=தலா 2
- எண்ணை+நெய் =தலா 2டீஸ்பூன்
- எலுமிச்சை சாரு =2ஸ்பூன்தனியாபொடி =2ஸ்பூன்
- உப்பு =தேவையானது
செய்முறை:
- 6ப.மிளகாய், தேங்காய், முந்திரி, சோம்பு விழுதாக அரைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணை+நெய் விட்டு பட்டை கிராம்பு,ஏலக்காய்,இலை தாளித்து பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சிபூண்டு வதக்கி தக்காளி, கோழி சேர்த்து வதக்கவும். அரைத்த விழுது,உப்பு,தனியாபொடி சேர்த்து வதக்கி 2கிளாஸ் தண்ணீர் விட்டு மூடி சிறுதீயில் வேகவிடவும். வெந்ததும் பால் ஊற்றி கொதித்ததும் எலுமிச்சை சாறு விட்டு இறக்கவும்.

0 comments:
Post a Comment