காராமணி பொரியல்

தேவையான பொருட்கள்:
- காராமணி - கால் கிலோ
- வெங்காயம் - ஒன்று
- வரமிளகாய் - 5
- தேங்காய்ப்பூ - அரை மூடி
- எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
- கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- காராமணியை பொடியாக நறுக்கி, ஒரு கடாயில் உப்பு போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு வேகவிடவும். வெந்தவுடன் தண்ணீரை வடித்து விடவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், கிள்ளிய மிளகாய் போட்டு வதக்கி காராமணியை கொட்டி கிளறி தேங்காய்ப்பூ போட்டு இறக்கவும்.

0 comments:
Post a Comment