காரட் மோலி
தேவையான பொருட்கள்:
- காரட் - 150 கிராம்
- பச்சை மிளகாய் - 3
- வெங்காயம் - பாதி
- பூண்டு - 5
- இஞ்சி - அரை இன்ச்
- தேங்காய் - கால் பகுதி
- உப்பு - தேவைக்கேற்ப
- நெய் - சிறிது
- பட்டை - ஒன்று
- சோம்பு - அரை தேக்கரண்டி
- ஏலக்காய் - 2
- கிராம்பு - 4
- கசகசா - அரை தேக்கரண்டி
- முந்திரி - 4
- புதினா, கொத்தமல்லி - தேவைக்கு
செய்முறை:

காய்கறிகளை நன்கு சுத்தம் செய்து சிறுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும். இஞ்சி, பூண்டை நசுக்கி வைக்கவும். கசகசாவை சூடுநீரில் 10 நிமிடம் ஊற விடவும். தேங்காயை துருவி கசகசா, முந்திரி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு தாளித்து புதினா, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்..

பிறகு காரட், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

காரட் தக்காளி நன்கு வதங்கியதும் தேங்காய் விழுது சேர்த்து 2 கொதி விட்டு, கொத்தமல்லி, புதினா சேர்த்து இறக்கவும்

சுவையான காரட் மோலி தயார்.

0 comments:
Post a Comment