இத்தாலியன் பாஸ்தா

தேவையான பொருட்கள்:
- பாஸ்தா - ஒரு கப்
- தக்காளி - 200 கிராம்
- வெங்காயம் - ஒன்று
- பூண்டு - 2 பற்கள்
- தேன் - கால் தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கு
- மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
- சிகப்பு பழுத்த மிளகாய் - 3
- பேசில் தழை - 4
- ஒரீகனோ, பார்ஸ்லே, தைம், ரோஸ்மரி - தலா 2 சிட்டிகை
- துருவிய மொசரேல்லா சீஸ் - 4 தேக்கரண்டி
- ஆலிவ் ஆயில் - கால் தேக்கரண்டி
செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். அதில் பாஸ்தாவைப் போட்டு பிசுபிசுப்பு இல்லாமல் பதமாக வேக வைக்கவும். வெந்ததும் குளிர்ச்சியான தண்ணீரில் மூழ்கவிட்டு எடுத்து ஆறவிடவும்.

தக்காளியைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக வைத்து எடுத்து, அதன் தோலை நீக்கி விட்டு கூழாக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், பூண்டு, மிளகாய், கூழாக்கிய தக்காளி, தேன், மிளகுத் தூள், ஒரீகனோ, பார்ஸ்லே, தைம், ரோஸ்மரி மற்றும் உப்பு சேர்த்து கலந்து சிம்மில் வைக்கவும்.

அதனுடன் வேக வைத்து ஆற வைத்த பாஸ்தாவைச் சேர்த்துக் கலக்கவும்.

பாஸ்தாவைப் பரிமாறும் தட்டுகளில் போட்டு சீஸைத் தூவி சூடாகப் பரிமாறவும்.

இந்தச் சாஸை ப்ரெட்டில் தடவி, அதன் மேல் காய்கறிகள், சீஸ் தூவி அவனில் 350 டிகிரியில் 5 நிமிடங்கள் வைத்து எடுத்த குட்டி ப்ரெட் பீட்ஸா உங்கள் பார்வைக்கு.

0 comments:
Post a Comment