காராமணி மசாலா
தேவையான பொருட்கள்:
- காராமணி - கால் கிலோ
- வெங்காயம் - 2
- தக்காளி - 2
- பச்சைமிளகாய் - 2
- இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
- கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
- மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
- இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதில் தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய காராமணியை போட்டு வதக்கவும்.
- நன்கு வதங்கியவுடன் மிளகாய்பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு வேகவிடவும். நன்கு வெந்து தண்ணீர் வற்றியவுடன் கிளறி இறக்கவும்.

0 comments:
Post a Comment