இனிப்பு தோசை

தேவையான பொருட்கள்:
- ரவை - 2 டம்ளர்
- மைதா - ஒரு டம்ளர்
- சீனி - 1 1/2 டம்ளர்
- முட்டை - 2
- தேங்காய் - கால் மூடி
- ஏலக்காய் - 4
- முந்திரி - 20
- நெய் - 2 தேக்கரண்டி
- எண்ணெய் - தேவைக்கு
- உப்பு - சிறிது
செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.

தேங்காய் மற்றும் ஏலக்காயை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். முந்திரியை நான்கு துண்டாக உடைத்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

அகலமான பாத்திரத்தில் ரவை, மைதா, சீனி, முட்டை, உப்பு, அரைத்த தேங்காய், வறுத்த முந்திரி போட்டு தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்

அடுப்பில் தவாவை வைத்து காய்ந்ததும் தோசையாக ஊற்றவும்.

மிதமான தீயில் வைத்து எண்ணெய் ஊற்றி இருபக்கமும் திருப்பி போட்டு சுடவும்.

சுவையான இனிப்பு தோசை ரெடி. விரும்பினால் எண்ணெய்க்கு பதிலாக நெய் ஊற்றி சுடலாம்.

0 comments:
Post a Comment