பாகற்காய் கருவாடு கூட்டு

தேவையான பொருட்கள்:
- பாகற்காய் - 2
- நெத்திலி கருவாடு - ஒரு கைப்பிடி
- வெங்காயம் - ஒன்று
- சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 2
- சிகப்பு (பழுத்த) மிளகாய் - ஒன்று
- கடுகு - அரை தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:

பாகற்காயை கழுவி பொடியாக நறுக்கவும். வெங்காயம், சிகப்பு மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பிறகு சிகப்பு மிளகாய் மற்றும் சோம்பு தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

பின் கருவாடு சேர்த்து பிரட்டவும்.

நறுக்கிய பாகற்காய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, அரை கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும். தண்ணீர் வற்றி, வெந்ததும் இறக்கவும்.

சுவையான பாகற்காய் கருவாடு கூட்டு ரெடி.

0 comments:
Post a Comment