உங்கள் குடும்ப மருத்துவர்களோ அல்லது நண்பர்களோ நீங்கள் பேலியோ உணவு முறை எடுப்பதை பார்த்து, உங்களுக்கு ஏதாவது ஆகிவிடும், அது இது என்று பூச்சாண்டி காட்டினால், நீங்கள் ஏதும் பயப்பட வேண்டாம்.
பல முறை நாம் கூறி வந்துள்ளோம், இத்தகைய உணவு முறையை வெகுஜன மருத்துவத் துறை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று.
அதற்கான முதல் அறிகுறி இதோ.
அதற்கான முதல் அறிகுறி இதோ.
மருத்துவ உலகின் பைபிளாக கருதப்படும் "Harrison's textbook of internal medicine" இல், சமீபத்தில் வெளிவந்துள்ள பதிப்பு, உடல் பருமன் குறைவதற்கான வழிகளில் ஒன்றாக, குறைந்த கார்போஹைட்ரேட் உணவு முறையை நல்ல முறை என்று பரிந்துரைத்துள்ளது.
பேலியோ என்ற வார்த்தை இடம் பெறாவிட்டாலும், அதில் லோ கார்ப் உணவுமுறை,
-நன்றாக எடை குறைய வழிவகுப்பதாகவும்,
-மாரடைப்பு போன்ற நோய்களின் காரணிகளை குறைப்பதாகவும்,
-hdl அதிகம், triglyceride குறைவு போன்ற நல்ல பலன்கள் கிட்டுவதாகவும்,
-எடை குறைப்பின் பொது நல்ல பசி அடக்கம் இருப்பதாகவும்
அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Harrison கூறினால் கடவுளும் எதிர்க்க மாட்டார் என்று நாங்கள் விளையாட்டாக கூறுவோம். மருத்துவ துறையில் அத்தகைய மதிப்பு உண்டு இந்நூலுக்கு.
பாடம் 78இல், பக்கம் 633இல், உள்ள பொன்னான வரிகள் உங்கள் பார்வைக்கு.
நாளை மருத்துவம் மாற இது முதல் படி.
உங்கள் தெருவில் இருக்கும் மருத்துவர், உங்கள் நோய்களுக்கு metformin, glibenclamide பதிலாக, 100 பாதாம், 3 முட்டை என்று ப்ரிஸ்க்ரிப்ஷனில் எழுதி தரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
உங்கள் தெருவில் இருக்கும் மருத்துவர், உங்கள் நோய்களுக்கு metformin, glibenclamide பதிலாக, 100 பாதாம், 3 முட்டை என்று ப்ரிஸ்க்ரிப்ஷனில் எழுதி தரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

0 comments:
Post a Comment