பேலியோவுக்கு மாற்று மக்கள் உணவா? என்றால் இல்லை. பேலியோவுக்கு மாற்று > வாரியர் பேலியோ > இன்டர்மிடன்ட் பாஸ்டிங் > கெட்டோஜெனிக் > ஸீரோ கார்ப்.
மக்கள் உணவு என்பது காமன் மேன் உணவு உண்பவர்களுக்கானது. காமன் மேன் உணவில் வயிற்றினை சுவைக்காக குப்பைத்தொட்டி போல சத்தில்லாத ருசி சார்ந்த உணவுகளால் அடைக்கும் மக்களை, அதே காமன் மேன் உணவில் சத்தான உணவை மட்டும் பிரித்து எடுத்து உண்ண வைக்கும் டயட்டே மக்கள் டயட்.
மக்கள் டயட்டின் அடுத்த கட்டம் இன்டர்மிட்டன்ட் பாஸ்டிங், நடைப்பயிற்சி, யோகா, சூரியக் குளியல் போன்றவை.
அதற்கு அடுத்த கட்டம் பிரச்சனைகள் சார்ந்து பேலியோ. பேலியோவிற்கான அடுத்தகட்டம் என்ன என்பதற்கு மூண்டும் முதல் வரியைப் படிக்கவும்.
--
பெரிய அளவில் கார்ப் சென்சிடிவ் இல்லாதவர்கள், இன்சுலில் ரெசிஸ்டன்ஸ் இல்லாதவர்கள், இதுவரை ஆரோக்கியமாக பிரச்சனைகள் இல்லாது காமன் மேன் உணவை உண்பவர்கள் தாராளமாக மக்கள் டயட்டைத் துவங்கலாம், வரும் காலத்தில் இன்சுலின் ரெஸிஸ்டன்ஸுக்காகவோ, உடல் பருமனுக்காகவோ, மற்ற அதிக கார்ப் சார்ந்த பிரச்சனைகள் காரணம் பேலியோ டயட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்திலிருந்து உங்களை அது காக்கும்.
--
பல பிரச்சனைகளுக்காக பேலியோ டயட் எடுத்து அதனால் பலனடைந்த மக்கள் மக்கள் டயட் எடுப்பதால் பேலியோவின் நன்மைகளை இழப்பீர்கள். பெரிய பிரச்சனைகள் இல்லாமல் ஆரோக்கியத்திற்காக பேலியோ எடுத்த மக்களுக்கு மக்கள் டயட் ஒத்துக்கொள்ளும்.
--
ஆக, உணவின் மீது பகுத்தறிவு இன்றி கண்டதையும் ருசி சார்ந்து உண்ணும் மக்களை முதலில் ஆரோக்கியமான சத்து சார்ந்த உணவின் மீது திருப்புவதற்கான ஒரு வழிமுறைதான் மக்கள் டயட் என்பதை அறியவும்.
--
மக்கள் டயட்டிலேயே தானியங்கள் விலக்கி, குறைந்த பட்ச பேலியோ டயட்டை ஏற்கனவே செல்வன் உருவாக்கி தந்துள்ளார். ஆக, குறைந்த செலவில் பேலியோ டயட் எடுக்க விரும்பும் அன்பர்கள் , லோ காஸ்ட் - லோ கார்ப் பேலியோ டயட்டை முயற்சிக்கலாம். மக்கள் டயட்டை அதனுடன் குழப்பிக்கொள்ளவேண்டாம்.
சாமானிய மக்களுக்கான லோகாஸ்ட் லோகார்ப் டயட்:
காலை: பட்டர் டீ.
+
ஆப்ஷனல்: விரும்பினால் கூட 100 கிராம் தேங்காய். (ஒரு முழு தேங்காய் 400 கிரா. ஆக 1/4 தேங்காய் சாப்பிடவேண்டும்)
ஆப்ஷனல்: விரும்பினால் கூட 100 கிராம் தேங்காய். (ஒரு முழு தேங்காய் 400 கிரா. ஆக 1/4 தேங்காய் சாப்பிடவேண்டும்)
மதிய உணவுக்கான தேர்வு 1: 200 கிராம் வேகவைத்த அல்லது வணக்கிய நிலக்கடலை. (கூட வெல்லம் சேர்க்க கூடாது)
***அல்லது***
மதிய உணவுக்கான தேர்வு 2: குட்டை அரிசி வகைகளை தவிர்த்து நீளமான அரிசி வகை ஒன்றை பயன்படுத்தவும். ஒரு சின்ன கப் (40 கிராம் சமைக்காத அரிசியை எடுத்து) குக்கரில் சமைக்காமல் திறந்த பாத்திரத்தில் கஞ்சி வடித்து சமைக்கவும்.
இப்படி சமைத்த அரிசியுடன், கருவாட்டுகுழம்பு அல்லது பேலியோ காய்கறிகுழம்பு, ஆகியவற்றை எடுக்கலாம்
உப்பிட்ட எலுமிச்சை ஜூஸ், பெரிய நெல்லிக்காய் -2, பசுமஞ்சள் தெரபி, போன்றவையும் தினம் எடுக்கவும்.
மாலை: 4 முட்டை, சைவர்களுக்கு - 1/4 கிலோ பேலியோ காய்கறிகள், 100 கிராம் கீரை
வாரம் 1 நாள் (சைவர்களுக்கு)
பாதாம் அல்லது பிஸ்தா - 100 கிராம்.
பனீர் - 200 கிராம்.
அவகோடா - 2
--
வாரம் 1 நாள் (அசைவர்களுக்கு)
ஆட்டு ரத்த பொறியல்
வாரம் 1 நாள் ஆட்டு ஈரல்
மற்றபடி நடை, 4 லி தண்ணீர், பேலியோ காய்கறிகள் எல்லாம் அதேதான். பாதாம் வாரம் ஒருமுறையும், ஒத்துக்கொன்டால் நிலக்கடலை ஒரு உணவாகவும், சைவர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.
மற்றபடி நடை, 4 லி தண்ணீர், பேலியோ காய்கறிகள் எல்லாம் அதேதான். பாதாம் வாரம் ஒருமுறையும், ஒத்துக்கொன்டால் நிலக்கடலை ஒரு உணவாகவும், சைவர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment