Saturday, July 30, 2016

ஹைப்போதய்ராய்டிசம்
தய்ராய்டு ஹார்மோன் குறைவாக சுரப்பதால் இவ்வியாதி உருவாகிறது. இதன் அறிகுறிகள்
அடிக்கடி களைப்படைதல்
பசியுணர்ச்சி இல்லாதிருத்தல்
குளிரை தாங்கமுடியாமை
குறைந்த உடல் வெப்பம்
குறைவேக இதயதுடிப்பு
உடல் எடை அதிகரிப்பு
கொலஸ்டிரால் அதிகரிப்பு
மாதவிலக்கு சமயம் கடும் வலி எடுத்தல்
மாதவிலக்கு சமயம் அதீத ரத்தபோக்கு
தசைபிடிப்பு, தசைவலி
உலர் சருமம்
மஞ்சள் நிற திட்டுக்கள் சருமத்தில் தோன்றல்
குரல் கட்டுதல்
கண்வீக்கம்
முதலானவை ஆகும்
தய்ராய்டு சுரப்பி தான் உடலின் தெர்மோஸ்டாட். அதுதான் உடலின் வெப்பநிலையை தீர்மானிக்கும். உடலில் காலரிகளை எரிக்கும் மெடபாலிசத்தை தீர்மானிப்பதும் தய்ராய்டே. இதனால் ஹைப்போதய்ராய்டு பிரச்சனை வந்தால் மெடபாலிசம் குறைந்து பசியும் குறைந்து உடல் எடை அதிகரிக்கிறது
ஹைப்போதய்ராய்ட்டு பெண்களுக்கே பெருமளவில் வரும் வியாதி. இவ்வொயாதி வந்தவர்களில் 90% பேர் பெண்களே
ஹைப்போதய்ராய்டு பிரச்சனை வரகாரணமாக சந்தேகிக்கபடுபவை
நீரில் இருக்கும் ப்ளோரைடு
காய்கறி,பழங்களில் இருக்கும் பூச்சிகொல்லி மருந்துகள்
அடிக்கடி எக்ஸ்ரே எடுப்பது
சிலவகை மருந்துகள்
மது
ஹைட்ரஜனேற்றம் செய்யபட்ட வெஜிட்டபிள் ஆயில்கள்
தவிரவும் கோதுமை புரதமான க்ளூட்டன் தய்ராய்டு பிரச்சனைக்கு முக்கிய காரணமாக சுட்டிகாட்டபடுகிறது. ஆட்டோஇம்யூன் தய்ராய்டு வியாதி (ஹஷிமோட்டொ,, கிரேவ்ஸ் வியாதி எனும் முற்றிய தய்ராய்டு நோய்கள்) வந்த அனைவரும் க்ளூட்டன் புரத அலர்ஜியை கொண்டவர்களாகவே இருப்பதால் இவ்வியாதிகள் வந்த அனைவருக்கும் க்ளூட்டன் அலர்ஜி சோதனை கட்டாயம் நடத்தபடும்.
தவிரவும் கோதுமையில் உள்ள க்ளியாடின் வகை புரதத்தின் மாலிக்யுலர் தன்மை தய்ராய்டு சுரப்பியின் மாலிக்யூல் தன்மை போலவே இருப்பதால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி க்ளியாடின் என நினைத்து தய்ராய்டு சுரப்பியை தாக்குகிறது. இதனால் தய்ராய்டு சுரப்பி கடும் பாதிப்பை அடைகிறது
ஹைப்போதய்ராய்டு குணமடைய எடுக்கவேண்டிய மூலசத்துக்கள்
எல்- டைரோசின்: இது ஒரு வகை அமினோ அமிலம். புரதம் அதிகமுள்ள உணவுகளில் இது காணப்படும். இது அதிகமுள்ள உணவுகள் பாதாம், பால், சீஸ், சிக்கன், பீஃப், முட்டை போன்றவையாகும்,. டைரோசின் தய்ராய்டு சுரப்பியின் செயல்திறனில் முக்கிய பங்காற்றுகிறது. அதனால் டைராசின் குறைவாக உண்பவர்களுக்கு விரைவில் தய்ராய்டு பிரச்சனைகள் தோன்றும்
பி- வைட்டமின்கள்: இவை செல்களின் ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரித்து, தய்ராய்டு நலனையும் மேம்படுத்துகின்றன. ஜீரண சக்தியையும் மேம்படுத்தும் தன்மை கொண்டவை. இதில் பி12 மட்டுமே சைவர்களுக்கு சிக்கலை அளிக்ககூடியது. பால் ஒன்றில் மாத்திரமே அது சைவர்களுக்கு கிடைக்கும். அதனால் பி12 அளவுகளை சைவர்கள் அதிகரிக்க கடும் முயற்சிகளை எடுக்கவேன்டும். முட்டை, இரைச்சி போன்றவற்றில் அசைவர்களுக்கு பி12 கிடைத்துவிடும்
பாதாமில் ரைபோபிலேவின் எனும் பி2 வைட்டமின் உள்ளது. இதுவும் தய்ராய்டு பிரச்சனைக்கு முக்கியமானது. சீஸ், முட்டை, பால் போன்றவற்றிலும் பி2 கிடைக்கும்
இரும்புசத்து குறைபாடும் தய்ராய்டு சிக்கலை தோற்றுவிக்கும். இரும்பு ஹீமோக்ளோபின் உற்பத்திக்கு முக்கியமானது. அசைவர்கள் மட்டன் மூலம் இரும்புசத்தை அடையலாம். சைவர்கள் முருங்கை கீரை மற்றும் இரும்பு பாத்திரங்களுக்கு மாறுதல் ஆகியவற்றை செய்யலாம். இரும்புசத்து மாத்திரைகளால் எப்பயனும் இல்லை.
செலனியம் நிரம்பிய முட்டையும் தய்ராய்டு நலனுக்கு உகந்தது
தவிரவும், வைட்டமின் ஏ, ஸிங், வைட்டமின் ஈ உள்ள முட்டையும் தயரய்டு டயட்டில் முக்கிய பங்காற்றும்
அதனால்
100 பாதாம்
4 முட்டை
1/2 கிலோ இரைச்சி
1/2 கிலோ காய்கறிகள்
1 கப் பால் என உண்டு
வைட்டமின் டிக்கு வெயிலில் நின்றால் ஹைபோதய்ராய்டு பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சைவர்கள்
100 பாதாம்
4 முட்டை
பனீர் டிக்கா
1/2 கிலோ பேலியோ காய்கறிகளை உண்ணலாம்
கூடுதலாக தவிர்க்கவேண்டிய காய்கறிகள்
பிராக்களி, ப்ருஸ்ஸல் ஸ்ப்ரவுட், ரேடிஷ், டர்னிப் போன்றவை
                                                                                                                 

                                                                                         Neander Selvan 

LikeShow more reactions
Comment

0 comments:

Post a Comment

Like Us Facebook

Categories

Unordered List

Sample Text

Blog Archive

Subscribe Via Email

Sign up for our newsletter, and well send you news and tutorials on web design, coding, business, and more! You'll also receive these great gifts:

Blog Archive

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Social Icons

Pages

BTemplates.com

Popular Posts

Popular Posts

Slider[Style1]

Find Us On Facebook

About us

Video Of Day

Popular Posts

Recent Posts

Text Widget