# பள்ளிபாளையம் வறுவல்
பேருக்கும் ஊருக்கும் சம்பந்தமே இல்லீங்க. இந்த முறைப்படி காளான், சிக்கன், மட்டன் எதுவேனாலும் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - சிறிது
வரமிளகாய் - 4
காளான் / சிக்கன் / மட்டன் - 1/4 கி
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கல் உப்பு - தேவைக்கு ( தூள் உப்பைவிட கல்லுப்பு நல்ல டேஸ்ட் கொடுக்கும் )
தேங்காய் சில்லுகள் - தேவைக்கு
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - சிறிது
வரமிளகாய் - 4
காளான் / சிக்கன் / மட்டன் - 1/4 கி
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கல் உப்பு - தேவைக்கு ( தூள் உப்பைவிட கல்லுப்பு நல்ல டேஸ்ட் கொடுக்கும் )
தேங்காய் சில்லுகள் - தேவைக்கு
கறிவேப்பிலை - 1 கொத்து
(optional) வேணும்னா சேர்த்துக்களாம்
சின்ன வெங்காயம் - 5
கரம் மசாலா - சேர்க்கலாம் ஆனா சேர்த்தமாதிரி தெரியக்கூடாது (வரும் ஆனா வராது மாதிரி)
சீரகம், மிளகு தூள் - தேவைக்கு (இறக்கும் போது சேர்க்கலாம்)
கரம் மசாலா - சேர்க்கலாம் ஆனா சேர்த்தமாதிரி தெரியக்கூடாது (வரும் ஆனா வராது மாதிரி)
சீரகம், மிளகு தூள் - தேவைக்கு (இறக்கும் போது சேர்க்கலாம்)
செய்முறை:
வடச்சட்டியின் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வரமிளகாய் சேர்த்து பிறகு காளான் / சிக்கன் / மட்டன் சேர்த்து பின் மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி பின் சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக வேகவைக்கவும் வெந்ததும் கறிவேப்பிலை தேங்காய் சில்லுகள் சேர்த்து இறக்கவும். பெரிதாக எந்த மசாலாப் பொருட்களும் சேர்க்காததால் நிறைய மசாலா சேர்த்தே பழக்கப்பட்ட நமக்கு சுவை வித்யாசமாக இருக்கும். ஒரு சில ஊர்களில் இத்ற்கு உப்புக்கறி என்று பேர். Optional : வரமிளாகாய்க்கு பிறகு சின்ன வெங்காயம், மஞ்சள் தூளுடன் கரம்மசாலா, இறக்கும் பொழுது சீரகம் மிளகுத்தூள் சேர்க்கவும். வேகும் பொழுது (இறக்க வதற்கு சிறிது நேரம் முன்பு) சிறிது விளக்கெண்ணெய் சேர்த்தால்கூட நன்றாக இருக்கும். எங்க ஊர் பக்கம் சில பொருட்களை கூட்டி குறைத்து 10 / 15 வகைகளில் தட்டி விலாஸ் ஹோட்டல்களில் செய்வார்கள். இப்ப அந்த மாதிரி ஹோட்டல்கள் இருக்கா என்று தெரியவில்லை. Ok நீங்களும் வித விதமா முயற்சி செய்யுங்க நல்லா இருந்தா post பன்னுங்க.


0 comments:
Post a Comment