தேவையான பொருட்கள்:
- மஷ்ரூம் - ஒரு பாக்கெட்
- பாஸ்தா - 2 கப்
- சுக்கினி - ஒன்று
- பூண்டு - 2 பல்
- மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
- ஒரேகனோ - சிறிதளவு
- பார்ஸ்லே - சிறிதளவு
- ஆலிவ் எண்ணெய் - 3 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- சாஸ் செய்வதற்கு:
- பால் - கால் கப்
- வெண்ணெய் - கால் கப்
- க்ரீம் - கால் கப்
- பார்மிசான் சீஸ் - 3 தேக்கரண்டி
செய்முறை:
பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் பாஸ்தா சேர்த்து 10-12 நிமிடம் வரை வேக விடவும்.
மீதமுள்ள தண்ணீரை வடிகட்டி பாஸ்தாவை காற்றோட்டமாக வைக்கவும். ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வர வேண்டும்.
வேறு ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு உருகியதும் க்ரீம் சேர்த்து பாலை கொஞ்சம் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு சீஸ் சேர்த்து கிளறி கொண்டே கொஞ்சம் பால் சேர்க்கவும். பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து 8 நிமிடம் கிளற வேண்டும்.
பெரிய வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து பொரிய விடவும்.
பச்சை வாசம் நீங்கியவுடன் நீளமாக நறுக்கிய காளான் மற்றும் துண்டுகளாக நறுக்கிய சுக்கினி சேர்த்து வதக்கவும்.
காளானில் உள்ள தண்ணீர் வற்றியவுடன் வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து கிளறவும். 2 நிமிடம் கிளறி சாஸை ஊற்றி மேலும் 2 நிமிடம் கிளறி மிளகு தூள், ஒரேகனோ மற்றும் பார்ஸ்லே சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
சுவையான மஷ்ரூம் பாஸ்தா ரெடி.


0 comments:
Post a Comment