கேப்சிகம் சோயா சன்னா மசாலா - CAPSICUM SOYA CHANNA MASALA
தேவையான பொருட்கள்:
- கேப்சிகம்-1
- மில்மேக்கர்-20 உருண்டைகள்
- சன்னா- ஒரு கப்
- வெங்காயம்-2
- தக்காளி-2
- இஞ்சிபூண்டு விழுது-3 ஸ்பூன்
- பச்சைமிளகாய்-2
- மிளகாய் தூள்- அரை ஸ்பூன்
- மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
- சீரகத்தூள்- அரைஸ்பூன்
- மிளகுதூள்- அரைஸ்பூன்
- கறிமசாலா தூள்- 1 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை-ஒருகொத்து
- உப்பு-தேவைக்கு
- எண்ணெய்-தாளிக்க
செய்முறை:
- சன்னாவை முதல் நாளே ஊற வைத்து வேக வைத்து எடுக்கவும்.
- மில்மேக்கரை சுடுநீரில் ஊறவைத்து 3 நிமிடங்கள் கழித்து நீர் இல்லாமல் பிழிந்து எடுக்கவும்.
- கேப்சிகமை சதுரமாக நறுக்கி வைக்கவும். (விதை தேவையில்லை)
- எண்ணெயில் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கவும்
- பொன்னிறமானதும் இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்
- தக்காளி துண்டுகளை சேர்த்து குழைய வதக்கவும்.
- கேப்சிகம் அரைபதமாக வேகும் அளவுக்கு வதக்கவும்.
- பின்னர் சன்னா, மில்மேக்கர் மற்றும் மசாலா தூள்களை சேர்த்து ஒரு டம்ளர் நீர் ஊற்றி வேகவிடவும். சுருண்டதும் இறக்கி பரிமாறவும்.
- இது சப்பாத்தி,பூரிக்கு ஏற்றது.


0 comments:
Post a Comment