தேவையான பொருட்கள்:
- சன்னா- 1 கப் (வேக வைத்தது)
- பாஸ்மதி அரிசி- 2 டம்ளர்
- வெங்காயம்- 3
- தக்காளி-2
- தயிர்- 1/2 கப்
- பிரியாணி மசாலா (அ) புலாவ் மசாலா பொடி- 2 ஸ்பூன்
- இஞ்சி,பூண்டு விழுது-2 ஸ்பூன்
- கொத்தமல்லி,புதினா- 1 கைப்பிடி
- முந்திரி-10
- நெய்- 2 மேசை கரண்டி
- பச்சை மிளகாய்- 2
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
- உப்பு- தேவைக்கு
- எலுமிச்சை -2
செய்முறை:
- சன்னாவை 8 மணி நேரம் ஊறவைத்து வேக வைத்துக்கொள்ளவும்.
- தக்காளியை அரைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்.
- பாத்திரத்தில் நெய் சேர்த்து மிளகாய்,முந்திரி வறுக்கவும்.
- பின் அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதில் புதினா,கொத்தமல்லி சேர்த்து வதக்கிய பின் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
- பின் தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- அதில் தயிர்,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,சன்னா சேர்த்து 5 நிமிடம் வதக்கி பின் தேவையான அளவு தண்ணீர் (4 டம்ளர்),உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- கொதித்த பின் அரிசியை கொட்டி வேக விடவும்.
- தண்ணீர் வற்றும் சமயத்தில் சிறுதீயில் வைத்து 15 நிமிடம் தம்மில் போடவும்.
- பின் கீழிறக்கி எலுமிச்சை சாறு பிழிந்து மீண்டும் கிளறி மூடிவிட்டு 15 நிமிடத்திற்கு பிறகு பரிமாறவும்.


0 comments:
Post a Comment