கிட்ஸ் பேக்டு மஷ்ரூம் - KIDS BAKED MUSHROOM
தேவையான பொருட்கள்:
- பெரிய பட்டன் காளான் மொட்டுகள் – 6
- வேக வைத்த உருளைக்கிழங்கு - ஒன்று
- சின்ன வெங்காய விழுது – ஒரு தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
- மிளகுத்தூள் - அரைத் தேக்கரண்டி
- தக்காளி சாஸ் – ஒரு தேக்கரண்டி
- சோயாசாஸ் - ஒரு தேக்கரண்டி
- வெண்ணெய் (அல்லது சீஸ்) – 2 மேசைக்கரண்டி
- உப்பு - தேவைக்கு
செய்முறை:
- உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தையும், இஞ்சி பூண்டையும் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- காளான் துண்டுகளில் உள்ள தண்டு பகுதியை மட்டும் மெதுவாக எடுத்து தனியே வைக்கவும்.
- தனியே எடுத்த அந்த தண்டு பகுதியை மட்டும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- காளான் துண்டுகளின் மீது முழுவதுமாக (உட்புறம் மற்றும் வெளிபுறங்களில்) வெண்ணெயை தடவி வைக்கவும்.
- வாணலியில் மீதி வெண்ணெயை போட்டு வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பிறகு நறுக்கிய காளான் தண்டுகளை போட்டு நன்றாக வதக்கி விட்டு அதனுடன் மசித்த உருளைக்கிழங்கையும் போட்டு வதக்கவும்.
- அதன் பின்னர் மிளகுத்தூள், உப்பு மற்றும் சாஸ் வகைகளை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து ஆற விடவும்.
- ஆறியதும் எடுத்து வெண்ணெய் தடவி வைத்திருக்கும் காளானுக்குள் வைத்து ஸ்டஃப் செய்யவும்.
- அவனை (oven) 350 F ல் முற்சூடு செய்து வைத்துக் கொள்ளவும்.
- ஸ்டஃப் செய்து வைத்திருக்கும் காளான் துண்டுகளை ஒரு பேக்கிங் ட்ரேயில் அடுக்கி வைக்கவும்.
- பேக்கிங் ட்ரேயை முற்சூடு செய்த அவனில் 10 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் எடுக்கவும். காளான் நன்றாக நிறம் மாறி வெண்ணெய் உருகி எல்லா பக்கங்களிலும் வழிந்து இருக்கும்.
- சூடான சுவையான பேக்டு காளான் ரெடி. ஆறியவுடன் பரிமாறவும்.


0 comments:
Post a Comment